dc.description.abstract |
இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகக விளங்கும் வடமாகாணம் 8,884 சதுர கிலோமீற்றர் மொத்த நிலப் பரப்பளவைக் கொண்டதோடு, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 13.22மூ உள்ளடக்கியது. மேலும் மொத்த நிலப் பரப்பளவில் 1இ981.30 சதுர கிலோ மீற்றர் காடுகளாகவும், 302.9. சதுர கிலோமீற்றர் கடல்களாகவும் உள்ளது. ஏறத்தாள 1.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைக் தன்னகத்தே கொண்டது. இந்த ஆய்வின் பிரதானமான நோக்கம் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை, அதன் உள்ளார்ந்த ஆற்றல்களை அறிவதோடு, பொருளாதார அபிவிருத்தியில் அது எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதாகவும் இருக்கும். ஆய்வுப் பிரச்சினையாக அல்லது சவாலாக வடமாகாணத்தின் புனுP பங்களிப்பு குறைவானதாக உள்ளமை, யுத்த காலத்தில் பெருமளவு நிலம் கையகப்படுத்தப்பட்டமை மற்றும் வடபுல மக்களின் வாழ்வாதார இழப்புக்கள், உயிரிழப்பு, ஊனம், சமூக பொருளாதார உட்கட்டமைப்புகள் அழிவுகள், வருமான சமமின்மையும் வறுமையும், யுத்த காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் பின்னர் (2009 இன் பின்) படிப்படியான வளர்ச்சியும் ஆய்வு முறையாக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டதோடு, விபரணப்புள்ளிவிபர முறை மூலம் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆ.ளு.நுஒஉநடட என்ற கணணி மென்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் மற்றும் சிபார்சுகளாக இங்கு நெல் பிரதான விவசாய உற்பத்தியாகவும், சின்னவெங்காயம், பச்சைமிளகாய், மரமுந்திரிகை, உருளைக்கிழங்கு, தென்னை, பனை, புகையிலை என்பன முக்கியமான ஏனைய விவசாய உற்பத்திகளாகவும் உள்ளன. மேலும் கைத்தொழில் நடவடிக்கைகளாக சீனிக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில், காகித உற்பத்தி, துணி உற்பத்தி, தீப்பெட்டி, சவர்க்காரம், பசளை போன்ற அன்றாட பாவனை உற்பத்தி போன்றவற்றுக்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதோடு நடுத்தர சிறுகைத்தொழில்கள், கிராமியக் கைத்தொழில்கள் இங்கு அபிவிருத்தியுற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே வடக்கின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த அரசு உடனடியாக குறைந்த வட்டி வீதத்தை
இவர்களுக்கு அறவிடுவதோடு,திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கூட்டி அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை கூட்டவேண்டும் சவால்களை வெற்றிகொள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை முழுமையாக விடுவித்தும், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தும் உற்பத்தித் துறைகளை வளர்க்க வேண்டும். வடக்கை பொருளாதார விருத்தியிலும் ஏனைய பிராந்தியங்களோடு இணைக்க வேண்டும், வேலைவாய்ப்புக்கள், போரால் பாதிக்கப்பட்ட சொத்துக்களை இழந்த குடும்பங்கள், குடும்பத்தலைமையை இழந்த குடும்பங்கள், வலுவிழந்தவர்கள், அங்;கவீனர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் இப் பகுதியினருக்கு அரச செலவீனத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதியினரையும் முன்னேற்றுவதனூடாகத்தான் ஏனைய மாகாணத்தவருக்குச் சமனாக ஒரு பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்;தி, மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் ஏனைய மாகாணங்களுக்குச் சமனான பங்களிப்பை வடமாகாகாணமும்; வழங்க முடியும். |
en_US |