dc.contributor.author |
Kanneraj, A |
|
dc.date.accessioned |
2021-05-21T09:08:27Z |
|
dc.date.available |
2021-05-21T09:08:27Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.issn |
20126573 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk/1234/14422 |
|
dc.description.abstract |
உலகநாடுகளில் பல்வேறு அரசாங்க முறைமைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது அவ்வவ் நாட்டின் வரலாறு, அரசியல் பின்னணி போன்றவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றது. அதேவேளை ஒரு நாட்டில் பின்பற்றப்படுகின்ற அரசாங்க முறைமை சிறந்ததாக விளங்குகின்றது என்பதற்காக, ஏனைய நாடுகள் அம்முறைமையைப் பின்பற்ற முடியாது. அவ்வாறு பின்பற்ற முற்பட்டதன் விளைவே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கான நாற்பது வருடகால வரலாறாகும். இதில் தனிமனித விருப்பும் தாக்கம் செலுத்தியிருந்திருந்தது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்ச்சிகள் மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. ஆயினும், அதன் இறுதி இலக்கு இன்னும் அடையப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பது தமிழ் மக்கள் பார்வையில், சாதகமானதா? அல்லது பாதகமானதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்பு ரீதியானதொரு ஆய்வாக அமைந்துள்ளது. இவ்வாய்விற்குத் தேவையான தரவு மூலங்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இவ்வாய்வின் பிரதான நோக்கமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தமிழ்ச் சிறுபான்மை இனத்திற்கு சாதகமாகவுள்ளதா? அல்லது பாதகமாகவுள்ளதா? என்பதனை அறிதல் ஆகும். அத்துடன் இவ்வாய்வின் துணைநோக்கமாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் மாற்று வழிமுறை தொடர்பில் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் பார்வையின் சாதக அம்சங்களை அறிதலும் ஆகும்.
தமிழ் மக்கள் தனித்து அரசாங்க முறைமையினை மாத்திரம் மாற்றியமைப்பதால் தமது அரசியல் அபிலாசைகளை அடைந்துவிட முடியாது. அதற்கும் அப்பால், சிறந்த அரசியல் பங்குபற்றலினாலும், தூர நோக்குடைய அரசியல் சிந்தனைகளினாலுமே தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதனையும் அவ்வாய்வு முன்மொழிகின்றது. |
en_US |
dc.language.iso |
ta |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி |
en_US |
dc.subject |
தமிழ்ச் சிறுபான்மை மக்கள் |
en_US |
dc.subject |
இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு |
en_US |
dc.title |
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை: தமிழ் சிறுபான்மை நோக்கில் - ஓர் கருத்தாடல் |
en_US |
dc.type |
Article |
en_US |