Abstract:
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டமானது பல்லினப் பண்பாட்டைக் கொண்ட பிராந்தியமாகும். இங்கு பெரும்பான்மையாக தமிழரும் அடுத்தபடியாக முஸ்லீம்கள் சிங்களவர்கள், பறங்கியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இப்பிராந்தியமானது புராதன காலம் முதலாக பல ஆட்சியாளர்கள் ஆளப்பட்டதுடன், 16 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பியர் ஆதிக்கத்திற்குட்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தங்களது குடும்பத்துடன் வருகைதராத போத்துக்கேயர் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்தமையால் 'பறங்கியர்' எனும் புதிய சமூகம் மட்டக்களப்பில் அறிமுகமானதுடன் புதியதொரு பண்பாட்டு அம்சமும் அறிமுகமாகியது. மட்டக்களப்பில் வாழ்கின்ற பறங்கிய மக்களின் பண்பாட்டில் மேற்கத்தைய முறையுடன் சுதேச மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் கலப்புற்றுக் காணப்படுகிறன. ஆயினும் தமது மூதாதையரால் கடைப்பிடிக்கப்பட்ட சில பண்பாடுகளை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றமை சிறப்பிற்குரிய விடயமாகும். திருமண நடைமுறைகள், கலைகள், உடை, உணவு, மொழி என்பனவற்றில் இவர்களது பண்பாட்டை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. மட்டக்களப்பு பண்பாடுகளை பறங்கியரும் பறங்கியரின் சில பண்பாடுகளை மட்டக்களப்பு மக்களும் தம்மிடையே ஈர்த்துள்ளனர் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது.