Abstract:
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட செங்கலடிப் பிரதேசத்தில் செங்கலடி பதுளை வீதியில் வேப்பவட்டுவான் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்டு ஏறத்தாள 3 முஅ தூரத்தில் குசலான் மலை எனும் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் முற்;றிலும் இந்து சமயத்தவர்கள் வாழும் பிரதேசமாகும். இங்குள்ள மலைகளில் பல தொல்லியலம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது காட்டுப்பிரதேசமாகக் காணப்படும் இவ்விடம் முன்பொரு காலத்தில் செறிவான குடியிருப்புக்களைக் கொண்டிருந்தமைக்கான தொல்லியல் அம்சங்களினைத் தன்னகத்தே கொண்டு இன்றும் விளங்குகின்றது. இலங்கை வரலாற்றில் இப்பிரதேசத்தின் தொன்மையை வெளிக்காட்டுவதாக அமைகின்ற போதிலும் சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் சமூக முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் விதத்திலும் அமைந்துள்ளன.
இப்பகுதியில் கருங்கற்தூண்கள், செங்கற்களால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள், பழைய கட்டடச் சிதைவுகள், மட்பாண்ட ஓடுகள், அடையாளங் காணப்பட்ட ஏழு தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள், குகைத்தளங்கள் முதலிய தொல்லியல் மூலாதாரங்களைக் காணலாம். இவற்றின் மூலம் இப்பகுதியில் குடியிருப்புகளுடன் கூடிய சமயம் சார்ந்த கட்டிடங்கள் இருந்தன என்பதனை உறுதிப்படுத்தலாம். பேராசிரியர் பரணவிதான ஐளெஉசipவழைளெ ழக ஊநலடழn எனும் தனது நூலில் 389, 390, 391, 392, 393, 394, 395 எனும் இலக்கமிடப்பட்டு குசலான்மலைக் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளார்.