Abstract:
நகரமயமாக்கம் என்பது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்
செயற்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. நகரம் என்னும் பிரிகோடு மக்களை நகர
வாசிகள், நகரவாசி அல்லாதோர் எனப் பாகுபடுத்துகின்றது. நகரங்கள் நவீன
வாழ்க்கையையும் அதற்கான சூழலையும் கட்டமைத்து வழங்குகின்றன. மக்கள்
வாழ்வதற்கான அத்தனை வசதிகளையும் உட்கொண்டவை என்னும் பிரமிப்பை
மக்களுக்கு ஏற்படுத்துவதற்கேற்ற விதத்தில் கட்டமைக்கப்படுகின்றன. நகரங்களின்
கட்டுமானம் சர்வதேச ரீதியின் அடிப்படையான சில வடிவமைப்புத் தன்மைகளைக்
கொண்டனவாக விளங்கும். நகரங்கள் மக்களை கவர்ந்திழுப்பதால் நகரை நோக்கிய
மக்களின் புலம்பெயர்வு நகரங்களின் வளர்ச்சியில் பாரிய பங்காற்றுகின்றது. இந்நகர
மயமாக்கத்தால் மக்கள் பல நன்மைகளை பெற்றுக்கொண்டாலும் தீமைகளையும்
ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இவ்வாய்வின் நோக்கமாக நகரமயமாக்கலின்
அடிப்படைகளைத் தெளிவுபடுத்தல், நகரமயமாக்கல் பாரம்பரிய பண்பாட்டில்
எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிதல், பாரம்பரிய
பண்பாட்டின் ஒரு கூறான கலைகளை எவ்வதம் பாதித்துள்ளது என்பதைக் கண்டறிதல்
ஆகியவற்றை நோக்காhக் கொண்டிருக்கும். இவ்வாய்வு சமூகம் அதன் பாரம்பரிய
பண்பாடு, பண்பாட்டின் ஒரு கூறான கலைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் ஆகியவை
தொடர்பான ஆய்வாக விளங்குவதால் பண்புசார் ஆய்வு முறையியல் பின்பற்றப்படும்.
இந்நிலையில் இந்த ஆய்வுவின் மூலம் நகரமயமாக்கத்தால் பாரம்பரிய பண்பாடு
பண்பாட்டின் ஒரு கூறான கலைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது
தெளிவுபடுத்தப்படும்.