dc.description.abstract |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார,
சமூக, சமய வழிபாடுகளைப் பற்றி அதிகளவில் ஆராய்ந்தார்கள். இவற்றுள் இந்துமத
மூல நூல்களில் ஒன்றாகிய பகவத்கீதை முக்கியமானது. இந்து மத மூலங்களை
உலகறியச் செய்ததில் மேற்கத்தயவர்களின் வகிபங்கை உணர்ந்தறிதல்., இதன்
மூலம் குறிப்பிட்ட சமூகம்சார் சமயம்,அதன்வழிபாடுகள்,பண்பாட்டம்சங்கள்
ஆகியவற்றின் உலகமயமாக்கல் அச்சமூகத்திற்கு எத்துணை அவசியம் என்பதனைக்
கண்டறிதல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாகும். இந்துப் பண்பாட்டம்சங்களை
உலகமயமாக்கலுக்கு உட்படுத்துவதில் இந்துமத வடமொழி, தென்மொழி
இலக்கியங்களை விட மேற்கத்தயவர்களின் ஆய்வுகள் முக்கிய இடத்தினைப்
பெறுகின்றன என்பது ஆய்வுப் பிரச்சினையாக உள்ளது. இவ்வாய்வில் பகுப்பாய்வும்
வரலாற்றியல் ஆய்வும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் இந்துமதம் சார்
இலக்கியங்களை உலகுக்கு அறிமுகம் செய்ததிலும், இந்துப் பண்பாட்டம்சங்களை
வளர்த்தெடுத்ததிலும் முன்னோடியாக மேற்கத்தய ஆய்வாளர்கள் விளங்கினர் எனும்
முடிவினை பெறமுடிகின்றது. |
en_US |