| dc.contributor.author | Senthooran, Kirubarajah | |
| dc.contributor.author | Arulmoly, Chelliah | |
| dc.date.accessioned | 2022-01-11T04:52:51Z | |
| dc.date.available | 2022-01-11T04:52:51Z | |
| dc.date.issued | 2021 | |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/1234/14532 | |
| dc.description.abstract | தொழினுட்பத்திற்கான விஞ்ஞானபாட அடைவில் அம்மாணவர்களின் க.பொ.த (சா/த) கணிதபாட அடைவ செலுத்தும் தாக்கத்தைக் கண்டறிந்து அதனை அகற்றுவதற்கான விதப்புரைகளை முன்மொழிவதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். இவ்வாய்வு அளவீட்டு ஆய்வுமுறையில் அமைந்து ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை பற்றிய பல தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலைக் கல்வி வலயத்திலுள்ள தொழினுட்பப் பிரிவைக் கொண்ட 1ABபாடசாலைகள் இவ்வாய்விற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அதிலிருந்து ஏழு (07) தொழினுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், ஒரு (01) அதிபரும், 45 மாணவர்களும் குறித்த நோக்குமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்முகங்காணல் மற்றும் ஆவணச் சான்றுகள் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் யாவும் ஆய்வின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் சதவீத அடிப்படையில் பெறப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தியமாணவர்களில் அதிகளவானோர் க.பொ.த (சா/த) கணிதபாடத்தில் சாதாரண சித்தியையே பெற்றுள்ளனர். அத்துடன் தொழினுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்திற்கான பாடத்திட்டம் முற்றாக முடிக்கப்படவில்லை. சிலஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளினூடாக பாடத்தைக் கற்பிப்பதுடன், பலர் அம்முறைகளைப் பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழினுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்தில் உயர் அடைவைப்பெற மாணவர்களின் கணிதபாட அடைவு இன்றியமையாதது என மாணவர்களும் ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பாடசாலைநிர்வாகம் அக்கறையுடன் செயற்படுவதுடன், கணிதபாடத்தைக் கற்பிக்க பாடசாலையில் போதிய வளங்களும் காணப்படுகின்றது. பால்நிலை வேறுபாடுகளும் அவர்களின் கணிதபாட அடைவில் செல்வாக்கு செலுத்தவில்லை. மாணவர்களின் கணிதபாட அறிவை மேம்படுத்த மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் நடைபெற்றவில்லை. | en_US | 
| dc.language.iso | ta | en_US | 
| dc.publisher | Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka | en_US | 
| dc.subject | அடைவுமட்டம் | en_US | 
| dc.subject | வகுப்பறை மட்டத்தில் கற்றல் | en_US | 
| dc.subject | கற்பித்தல் | en_US | 
| dc.subject | தொழிற்கல்வி | en_US | 
| dc.subject | தொழில்திறன் | en_US | 
| dc.title | தொழினுட்பத்திற்கான விஞ்ஞானபாட அடைவில் அம்மாணவர்களது க.பொ.த (சா/த) கணித பாட அடைவு செலுத்தும் தாக்கம் | en_US | 
| dc.type | Article | en_US |