Abstract:
மட்டக்களப்பு நகரப்பிரதேசத்தில் துரித உணவு நுகர்வில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
எனும் தலைப்பில் மட்டக்களப்பு நகரப்பிரதேசப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துரித உணவு
நுகர்வில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை அடையாளம் காணுதல் என்பதனை
நோக்கமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாம் நிலைத்தரவுகள்,
இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட மாதாந்த
வருமானம், துரித உணவின் விலை, சுவை, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை,
சுகாதாரம் மற்றும் கல்வி நிலை போன்ற மாறிகளைக் கொண்டு வினாக்கொத்துக்கள்
தயாரிக்கப்பட்டு 100 மாதிரியிடமிருந்து தரவுகள் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
பல்மாறி பிற்செலவு சமன்பாட்டினைப் பயன்படுத்தி ஆய்வின் முடிவுகள்
கண்டறியப்பட்டுள்ளதுடன் இதனூடாக துரித உணவு நுகர்வில் செல்வாக்கு செலுத்தும்
காரணிகள் கண்டறியப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதன்படி ஆய்விற்காக
எடுத்துக்கொள்ளப்பட்ட சார்ந்த மாறியான துரித உணவு நுகர்வு செய்யும் தடவையில் துரித
உணவின் விலை எதிர்கணியத் தாக்கத்தினையும் ஏனைய காரணிகள் நேர்க்கணிய
தாக்கத்தினையும் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், துரித உணவு நுகர்வினை
தீர்மானிக்கும் காரணிகள் அவையென அடையாளப்படுத்தப்பட்டன. ஆய்விற்காக
எடுத்துக்கொள்ளப்பட்ட சாரா மாறிகள் அனைத்தும் பொருண்மைதன்மை கொண்டுள்ளன
என்பது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளன.