dc.description.abstract |
ஒரு குடும்ப வாழ்வுக்கு தொழில் இன்றியமையாதது. ஒரு குடும்பத்தில் ஒருவர்
மாத்திரம் உழைத்து குடும்ப வாழ்க்கையை சரியாக கொண்டு செல்ல முடியாது
என்று கருதுமளவிற்கு வாழ்க்கைச் செலவீனம் மிகைத்துக் காணப்படும் இக்கால
சூழலில், குடும்பத் தலைவிகளான பெண்கள் தொழிலுக்காக தமது வீட்டை, தாய்
நாட்டை, வீட்டை மற்றும் குடும்பத்தை விட்டு, மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கு
செல்வதில் உள்ள சிக்கல் நிலமைகளை, இவ்வாய்வு பிரச்சினையாக கொள்கிறது.
குடும்பத் தலைவர்களான ஆண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் நிமித்தம்
செல்வதால் பிரச்சினைகள் இருந்தபோதும், ஒப்பீட்டளவில் ஒரு குடும்பத் தலைவியான
தாயின் வெளிக்கிளம்புதலினால், குடும்பத்தில் ஏற்படும் தாக்கங்கள் மிகவும்
மோசமானதாகவும், எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் நடத்தையிலும்,
கல்வியிலும் பலத்த சீரழிவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதை மறுக்க முடியாது,
இவ்வாறான சூழலில், இஸ்லாமிய வழிகாட்டல்களை எடுத்துக் காட்டுவதுடன்,
சமுதாய நடைமுறையில் இதனால் ஏற்படும் அவலங்களை வெளிக்கொணர்வதே
இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கு அரபு நாடுகளை இங்கு
நோக்குவதற்கான காரணம், தமிழ்மொழி பேசும் பெண்கள் வேலைவாய்ப்புக்காக,
அதிகமாக மத்திய கிழக்கு அரேபிய நாடுகளை நோக்கியே படையெடுப்பதானால்,
மொழித் தொடர்பாடலில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், ஆயினும் மலேசியா
மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பரவலாக
பேசப்படுவதனால், தொடர்பாடல் இலகுவானதாக காணப்பட்டாலும், ஏற்படும்
தாக்கங்களும், பாதிப்புக்களும் பொதுவானதே. இதற்கான பகுப்பாய்வு இஸ்லாத்தின்
மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் அல் ஹதீஸ் ஆகியவற்றின் கருத்துக்களின்
அடிப்படையில் பெறப்பட்டு, சமுதாய நடைமுறைகளோடு ஒப்பிட்டு
விவாதிக்கப்படுகிறது. |
en_US |