Abstract:
மடக்களப்பில் தழிழ் முஸ்லிம்கள் அடுக்கமைவாக தழிழ்க்கிராமம் அடுத்து முஸ்லம் கிராமம் என்ற
வகையில் இருசமூகங்களும் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு இருந்தாலும் இவ்விரு
சமூகங்களுக்கிடையேயுமான நல்லுறவு என்பது யுத்தத்திற்கு முன்பு மிகவும்
அன்னியோன்னியமானதாகவும் யுத்தக்காலப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும்
காணப்பட்டது. தற்பொழுது இலங்கையில் யுத்தமில்லை என அறிவிக்கப்பட்டு யுத்ததிற்கு முன்,
யத்ததிற்கு பின் என்ற பாகுபாட்டினடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி, சமாதான முயற்சி,
மீள்குடியேற்றம், என்பனவெல்லாம் இடம் பெறுகின்றன. இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
இன நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகள் எவ்வாறு அக்காலப்பகுதியில் ,டம்பெற்றிருக்கின்றன
என்பதனை ஆராய்வதாக ,ந்த ஆய்வு அமைகிறது. ,வ்விரு சமூகங்களுக்கும் இடையே ஏன் சமூக
நல்லுறவு ஏற்படுத்தப்படவேண்டும் எனநோக்கினால் இவ்விரு சமூகங்களும் ஒன்றில் ஒன்று
தங்கிவாழ்கின்றன. அத்தோடு புவியில் இடவமைவு அவர்களது குடியிருப்புக்கள் அருகருகாமையாக
அமைந்திருப்பதால் ஒரு கிராமத்தைக் கடந்தே மற்றுமொரு கிராமத்திற்கு பயணிக்க
வேண்டியுள்ளது. மட்டக்களப்பு நகரத்தை அடைவதற்கு முஸ்லிம்கள் தமிழ்க் கிராமத்தைக் கடந்தும்
தமிழர்கள் முஸ்லிம் கிராமத்தைக் கடந்தும் செல்லவேண்டிய தேவையுள்ளதனால் இவ்விரு
சமூகங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து நல்லுறவுடன் வாழவேண்டிய தேவை மிக இன்றியமையாத
ஒன்றாக உள்ளது.
எனவே இவ் ஆய்விற்காக நேரடிக் கலந்துரையாடல்களை வாழைச்சேனை, ஓட்டமாவடி
எல்லையிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள், காத்தான்குடி, ஆரயம்பதி எல்லையைச் சார்ந்த தமிழ்,
முஸ்லிம் மக்கள் மற்றும் ஏறாவூர் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆகியோர்களுடன் மேற்கொள்வதன்
மூலமும் மற்றும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதகுருமார்களுடன் கலந்துரையாடல்களை
மேற்கொள்வதன் மூலமும் தகவல்கள் பெறப்படும். மேலும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான பேரவை,
சமய தலைவர்கள் ஒன்றியம் போன்றவற்றிலுள்ள அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்களை
மேற்கொள்வதன் மூலமும், சில ஆவணங்களை பெற்றுக் கொள்வதன் மூலமும் தரவுகளும்
தகவல்களும் பெறப்படும். எனவே இருசமூகங்களையும் கசப்புணர்வு களில் இருந்து விடுவித்து
மீண்டும் நல்லுறவை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது
பற்றியும், அம்முயற்சிகளுக்கு ஏற்பட்ட சவால்கள் என்ன என்பதனையும் கண்டறிந்து இவ்விரு
சமூகங்களுக்குமிடையே சுமுகமான நல்லுறவை கட்டியெழுப்ப எடுக்கக் கூடிய புதிய யுத்திகளைக்
கண்டறிந்து அவற்றை எதிர்காலத்தில் பிரயோகிப்பதற்குமான ஒரு ஆரம்ப ஆய்வாக இது
அமைகின்றது.