dc.description.abstract |
மீட்பின் திட்டத்தை மானிட சந்ததிக்கு இறுதிவரை எடுத்துச் செல்ல இயேசு கிறிஸது திருத்தாதர் பேதுரு தலைமைத்துவத்தின் கீழ் திருச்சபையை நிறுவினார். இத்திருச்சபையாளது இயேசு கிறிஸ்துவை தேவ குமாரன் என்று விசுவாசித்து, அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் பாவமனிைப்புப் பெற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க அர்ப்பணிக்கும் கூட்டமே திருச்சபையாகும். அந்தத் திருச்சபையானது ஒரே திருச்சபையாக ஆரம்ப காலங்களில் காணப்பட்டாலும் காலப்போக்கில் மாறுபட்ட புதிய போதனைகளினால் திருச்சபை 1054ஆம் ஆண்டு பிளவுபட்டு கீழைத்தேயம், மேலைத்தேயம் என இரு பெரும் பிரிவுகணகச் செயற்படுகின்றது 15ஆம் நூற்றாண்டின் பின்வர மாட்டின் லூத்தரின் சீர்த்திருத்தத்தினால் (1517ஆம் ஆண்டு ஒக்டோபர் 31) திருச்சபைக்குள் மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன. அதன் விளைவாக கத்தோலிக சபையில் இருந்து பிரிந்தவை 'சீரதிருத்தச்சபை' என அழைக்கப்பட்டவ இப்பிளவினைக் காரணியாகக் கொண்டு திருச்சபையினுள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இவ்வாறாக திருச்சபையில் பிளவுகள் ஏற்படும் போது அதன் ஒருமைக்குப் பங்கம் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. இயேசுவினால் அழைப்புப் பெற்று அவருக்குரிய ஒரே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஒரே திருச்சபையின் ஒன்றிப்பு வெளிவாரியாகத் தெளிஷபடுத்தப்படவும், திருச்சபை எவ்வாறு பிளவுபட்டு போதனைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதனுடைய வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இல ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றை மையப்படுத்திய இவ்வாய்வானது நோக்கத்தினை அடைந்து கொள்ளும் வகையில் பண்புசார் அளவை நிலைபிளைக் கைக்கொண்டுள்ளது நேர்காணல் உரையாடல் மற்றும் அவதானிப்பு மூலம் பெற்ற முதலாம் நிலைத்தரவுகளையும், இரண்டாம் நிலைத்தரவுகளான நூல்கள், திருவிலியம், சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் போன்றவற்றையும் பயனபடுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள் வரணற்றுப் பகுப்பாய்வு மற்றும் விபரணப் பகுப்பாய்வு முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்னை மரபுவழி கிறிஸ்தவ சபைகளும் சுயாதீன் சபைகளும் போதனைகளின் அடிப்படையில் தமக்குள் பிளவுபட்டு இருந்தாலும் அவர்களுக்கிடையில் பல ஒன்றுபட்ட போக்குகளும் காணப்படுகின்றன என்பதே இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது |
en_US |