பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரிகத்தின் தாக்கம் - யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பீட்டாய்வு

Show simple item record

dc.contributor.author நிருத்திகா ஜீவராசா, இரத்தினசிங்கம் சகாயசீலன்
dc.date.accessioned 2024-03-14T03:54:00Z
dc.date.available 2024-03-14T03:54:00Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15121
dc.description.abstract பண்பாடு என்பது வாழ்க்கை முறை (Way of Life) ஆகும். ஒரு சமுதாயத்தில் வாழும் மக்களின் பெருமைகளையும் எண்ணங்களையும் ஒருமித்த நடத்தைகளையும் வெளிப்படுத்தும் மையப்புள்ளியாகப் பணிபாடு காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்களுக்குப் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதிலும் தெரியப்படுத்துவதிலும் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் முக்கிய இடம் பெறுகின்ற புதிய விடயங்களைத் தெரிய வேண்டுமென்றால் இணையத்தை நாடுகிறார்கள். ஆணல், பழைமையான விடயங்களையும் பண்பாடுகளையும் விளம்பரம் செய்வதற்கு யாரும் முன்வருவதும் இல்லை பழைமையான பொருட்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என்றரீதியில் தமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்கின்றார்கள். நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவர்ச்சிகரமான கலாசார விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் நாகரிகமான முறையிலேயே வாழ்வதற்கு விரும்புகின்றார்கள். இவ்வாறான மக்களால் ஒரு நாட்டினுடைய பழைமையான பண்பாட்டம்சங்களைத் தற்காலத்தில் நடைமுறைப்படுத்துவதென்பது இயலாமல் உள்ளது. பாரம்பரிய பண்பாட்டின் சிதறல் என்பது நவநாகரிகத்தின் தாக்கம் எனலாம். இவ்வாறான தாக்கத்தினால் ஏற்படும் பாரிய பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரிகத்தின் தாக்கம். யாழ்ப்பான மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டு முறைகளையும், அதன் நன்மைகளையும், அவற்றின் தேவைகளையும் தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்தி அவற்றைப் பின்பற்ற வைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது இந்து சமூகப் பண்பாட்டின் ஆரம்ப காலம் தற்காலப் பாரம்பரியங்களை ஒப்பீட்டாய்வு செய்வதன் மூலம் எதிர்கால ஆய்வு முயற்சியாளர்களின் அறிவு விருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது. இவ் ஆய்வின் முறையியலாக அளவை முறைத் தகவல்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் முதன்நிலைத் தரவுகளாக விளங்குகின்றன. இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளத் தரவுகள் என்பன இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பண்புசார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நவநாகரிகத் தாக்கத்தின் விளைவால் சமூக நல்லுறவில் ஏற்பட்ட முரண்பாடுகளைச் சீர்செய்தல், பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரிகம் ஏற்படுத்திய தாக்கத்தினையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கண்டறிதல் என்பவற்றின் மூலம் தற்கால சந்ததியினரும், எதிர்காலம் சந்ததியினரும் தவறான கலாசாரத்தைப் பின்பற்றுவதனை இல்லாது செய்தலாகும். தற்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைச் சரிசெய்து எதிர்காலத்திற்குச் சிறந்த பாதைக்குரிய உந்துசக்தியினை உருவாக்க முடியும் எனலாம் en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject பண்பாடு en_US
dc.subject நவநாகரிகம் en_US
dc.subject சமூக நல்லுறவு en_US
dc.subject இந்து சமூகம் en_US
dc.subject கலாசாரம் en_US
dc.title பாரம்பரிய இந்து சமூகப் பண்பாட்டில் சமகால நாகரிகத்தின் தாக்கம் - யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பீட்டாய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account