Abstract:
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் முக்கியமான தொழிலாக மீன்பிடித் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் ஒன்றாக ஒலுவில் கிராமம் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் மரபு ரீதியாக விவசாயம், மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 2000 மீனவர் குடும்பங்கள் வாழ்கின்றனர் அவற்றுள் 2150 நபர்கள் மீனவர்களாக தமது வாழ்வாதாரத்தை தேடுகின்றனர். மீ மீனவ சமுதாயமானது காலத்திற்குக் காலம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக கடல் அரிப்பு, துறைமுகம் வருகையினால் காணி இழப்பு, மண் அகழ்வு என பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது. ஆயினும் தற்போது இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்சமயம் இன்னும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றினை வெளிக்கொண்டுவருவதற்காக முதலாம் தரவுகளான நேரடி அவதானம். நேர்காணல் காணல் போன்ற முறைகளையும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பொருத்தமான ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளம் என்பனவற்றின் மூலம் பெறப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டு இங்கு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலமாக ஒலுவில் பிரதேச மீனவச் சமுதாயத்தின் முக்கிய பிரச்சினைகளாக அதிகமான அதிகமான வறுமை நிலை, அதிக கடன் சுமை வெளிநாடு ளிநாடு செல்லுதல் செல்லுதல், தங்க ஆபரணப் பொருட்கள் விற்பனையும் அடகு வைத்தலும் தொழிலை மேற்கொள்வதற்கான மூலப் பொருட்களின் விலை ஏற்றம் முதலிய காரணங்களினால் தங்களின் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றினை வெளிக்கொண்டு வருவதுடன் இப்பிரச்சினைகளை திரப்பதற்கான பொருத்தமான பரிந்துரைகளும் இனங்காணப்பட்டு முன்வைக்கப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.