dc.description.abstract |
தென்னாசியாவில் இந்தியா நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுப் பராம்பரியங்களைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. அந்தவகையில் இந்தியாவின் ஏராளமான இந்துசமயம்சார் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிந்துவெளி, அரிக்கமேடு ஆகிய நகரங்களின் தொன்மையையும் தொடர்ச்சியான வரலாற்றையும் நிரூபிக்கும் வகையில் ஏராளமான தொல்லியற் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்விரு இடங்களில் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு இருந்தாலும், இந்நகரங்களைப் பற்றி முழுமையான விபரங்கள் வெளிக்கொணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நகரங்களை மேலும் அகழ்வாய்வுகளிற்கு உட்படுத்தும் போது தமிழரின் பெருமை உலக அரங்கில் பேசப்படும். இவ்விரு இடங்களையும் அகழ்வாய்வு செய்யும் பொழுது வழிபாட்டுக் கட்டடங்கள், மட்பாண்டங்கள், செங்கற்கள், ஈமத்தாழிகள், தெய்வச்சிலைகள், பிராமி ஓடுகள், மதுச்சாடிகள் எனப் பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சின்னங்கள் இவ்விரு நகரங்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்காட்டுபவையாக அமைகின்றன. இந்நகரங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைமுறை என்பவற்றைக் கூறுவதோடு இந்நகரங்கள் என்ன காரணத்தினால் அழிந்தது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்நகரங்களின் விஸ்தரிப்பு ஏனைய நாடுகளுடன் இருந்தாலும் இன்று இவ்விரு நகரங்களின் நிலை என்னவென்பதும் இந்நகரங்கள் தமிழர்களின் பிறப்பிடமாகவும் இருந்துள்ளது என்பதனை நிரூபிக்கவும், இந்நகரங்களின் வரலாற்றுத் தொன்மையை வெளிக்கொணர்வதால் உலக வரலாற்றில் தமிழருக்கான மதிப்பினை அடையாளப்படுத்தவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது |
en_US |