dc.description.abstract |
நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்துசமயம் பல தலைமுறைகளாக பண்பாடு, கலை, கலாசாரம், இந்து இலக்கியங்கள் என்பவற்றை பாதுகாக்கின்றது. இவை அன்று தொட்டு இன்று வரை சமயப்பெருத்தகைகளினால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறை காணமுடிகின்றது அந்தவகையில், ஈழத்திலும் சமயப்பெருந்தகைகள் தோற்றம் பெற்றுள்ளனர் அவர்களில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகள் குறிப்பிடத்தக்கவர். சிவபூமியின் அறக்காவலளாக இருந்து சைவசமயத்தை வளர்த்து வருகின்றவர்களில் இவரும் ஒருவராவார் இந்து இலக்கியங்கள் அர்சு வடிவங்களிலும் இணையவழிகளிலும் பாதுகாக்கப்படுகின்றன இவற்றை அழியாது பாதுகாப்பதற்காக அணிமனையினை அமைத்து புதிய முயற்சிக்கு வித்திப்பார். இவை எதிர்காலத்திற்கும் பாதுகாப்பாக அமையும் என நம்பப்படுகிறது. ஆறு திருமுருகளின் சம சமூகப் பணிகளை வெளிப்படுத்தல், சிவபூமி அறக்கட்டளையின் பணிகளை விபரித்தல், நாவற்கு சிவபூமி திருவாசக அரணமனை மற்றும் கொக்கட்டிச்சோலை சிவபூமி திருமந்திர அரண்மனை தொடர்பான விடயங்களை ஆராய்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இவ்வாய்வானது ஆறு திருமுருகனுடனான நேர்காணல், இணையக் காணொளிகள், நேரடி அவதானிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாக அமைந்துள்ளது. கஜையவு, பகுப்பாய்வு, விபரணயவு போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவாசக அரணமனை, திருமந்திர அரணமனை அமைவிடம், திருவாசக மற்றும் திருமந்திர பொறிப்பு முறை, வழிபாட்டு முறைகள், நுண்கலைவளர்ச்சி, அரணிமனைகளின் சிறப்புகள், அரணமனை வெளிப்படுத்தும் பணிபாட்டுக் கோலம், சமூக நல்லுறவு போன்றவற்றைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது. மேலும் இவ்வாய்வு இது போன்ற புதிய சிந்தனைகள் தோற்றம் பெறுவதற்கும் வழிவகுக்கும் |
en_US |