dc.contributor.author |
றொசாயினி, நித்திஞானம் |
|
dc.date.accessioned |
2024-03-14T04:09:16Z |
|
dc.date.available |
2024-03-14T04:09:16Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15126 |
|
dc.description.abstract |
இந்த உலகில் மானிடராய்ப் பிறந்த அனைவரும் வாழ்தல் பொருட்டு பல்வேறு ஒழுக்கக் கருத்துக்களையும் விழுமியப் பண்புகளையும் பின்பற்றுபவர்களாகவே காணப்படுகின்றனர். ஆதிகாலம் தொடக்கம் இன்று வரை நல்லொழுக்கமானது மனிதனின் உயர்பண்பாக கருதப்படுகின்றது. நல்லொழுக்கம் எனப்படுவது மனிதர்களை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகவும் காணப்படுகின்றது. அடுதவகையில், மகாபாரதம் வெளிப்படுத்தும் வாழ்வியல் தத்துவம் ஒழுக்கவியல் அடிப்படையிலான ஓர் ஆய்வு எனும் தலைப்பிள் ஊடாக மகாபாரதமானது சமயச்சார்புடையதாகக் காணப்பட்டாலும் ஒழுக்கவியல் கருத்துக்களையும் கொண்டதாகவே காணப்படுகிறது என்பதனையும் இவ்வொழுக்கவியல் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்குமாற்றினையும் வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மேலும், ஒழுக்கத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்து கொள்ளுதல், ஒரு மனிதன் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்தின் மூலம் வாழ்வில் எவ்வாறான உயர்ந்த நிலையினை அடையலாம். ஒழுக்கமற்ற மனிதர்களின் வாழ்வு எவ்வாறு காணப்படும் ஆகிய துணை நோக்கங்களையும் இந்த ஆய்வு கொண்டுள்ளது. இவ்வாய்வு இலக்கியத்தில் காணப்படும் கோட்பாட்டு விடயங்களைப் பகுப்பாய்வு செய்வதனால் இது விபரிப்பு ஆய்வாகவே அமையும் இதனால் பணிபுசார் ஆய்வுமுறை இங்கே பிரயோழிக்கப்படுகின்றது. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தர மூலங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக்குரிய விடயம் பணிபுசார் அடிப்படையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவு காணப்படுகின்றது மனிதன் தனக்கெனக் காணப்படும் வாழ்வியல் ஒழுக்கத்திலிருந்து மீறாது அவ்வொழுக்கத்தினைப் பேணுவதன் மூலம் சமூகத்தில் பல்வேறு விதமான சமூக சிர்கேடுகளிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் மீள முடியும் அந்தவகையில், மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒழுக்க சிந்தனைகள் குறித்த இவ்வாய்வு ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கு உகந்ததாகவே காணப்படுகின்றது |
en_US |
dc.publisher |
DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA |
en_US |
dc.subject |
ஒழுக்கம் |
en_US |
dc.subject |
மகாபாரதம் |
en_US |
dc.subject |
தர்மம் கர்மம் |
en_US |
dc.title |
மகாபாரதம் வெளிப்படுத்தும் வாழ்வியல் தத்துவம் - ஒழுக்கவியல் அடிப்படையிலான ஓர் ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |