dc.contributor.author |
எலோமி ஜெனிட்டா, சி.சிவகாந்தன் |
|
dc.date.accessioned |
2024-03-14T04:24:03Z |
|
dc.date.available |
2024-03-14T04:24:03Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15129 |
|
dc.description.abstract |
உயர்குருதி அமுக்கமானது முக்கியமான தொற்றாநோய்களுள் ஒன்றாகக் காணப்படுவதுடன் மக்களின் நல்வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறித்த ஆய்வானது உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளையும் ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தைக்கும் சமூகக் குடித்தொகைக் காரணிகளுக்கும் இடையிலான தொடர்பினையும் நிர்ணயிப்பதை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட இந்த ஆய்வில் கலப்புமுறை வடிவம் பயன்படுத்தப்பட்டது. அடுக்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 292 நோயாளிகளை மாதிரிப் பருமனாகக்கொண்டு நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வினாக்கொத்து, நேர்காணல், விடய ஆய்வுகள் மூலம் முதலாம்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. கணியம்சார் தரவுகள் SPSS உதவியுடன் விபரணப்புள்ளிவிபரவியல் பகுப்பாய்விற்கும். பண்புசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவுகளின்படி 68% பெண்களாகவும் 62% மானோர் 56-65 வயதிற்கிடைப்பட்டவர்களாகவும் இருந்தனர். மேலும், உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 80.5% மானோர் தமது நோய்க்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டனர். மேலும், 57.2% மானோர் உயர்குருதி அமுக்கம் சாதாரணமானது எனவும் 42.8% மானோர் தீவிரமானதெனவும் குறிப்பிட்டனர். ஆண்களில் 33.9% மானோர் மதுப்பழக்கம் உடையவர்களாவர். இவர்களில் 4.1% மானோர் மட்டுமே உயர்குருதியமுக்க சிகிச்சைக்குப் பின்னர் மதுப்பழக்கத்தைக் குறைத்துள்ளனர். மேலும், ஆண்களில் நோய்நிலையை அறிந்ததன் பின்னரும் புகைப்பழக்கத்தை தொடர்ந்தவர்களாக 3.7% மானோர் காணப்படுகின்றனர். மேலும், பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் தொடர்பில் 80.1% மானோர் பூரண அதிருப்தி (41.1%) மற்றும் அதிருப்தியினையும் (39%) வெளிப்படுத்தியிருந்தனர். சமூகக் குடித்தொகைக் காரணிகளான பால் நிலை(P=0.000<0.05), வருமானம் (P=0.000<0.05), கல்வி நிலை (P=0,000<0.05) என்பன உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தையில் புள்ளிவிபரவியல் ரீதியாக மிகநெருங்கிய இடைத்தொடர்பைக் கொண்டிருந்தன. உயர்குருதியமுக்கத்திலிருந்து விடுபட மருந்துகள் அனைத்தும் அரசாங்க வைத்தியசாலையில் கொடுக்கப்பட வேண்டுமென்பதே நோயாளிகளின் பிரதான எதிர்ப்பார்ப்பாக இருந்தது. உயர்குருதி அமுக்கத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முறையான சிகிச்சையினைப் பெற்றுக்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கைப்பாணியைப் பின்பற்றவேண்டுமெனவும் ஆய்வு பரிந்துரை செய்கிறது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
சுகாதாரப் பராமரிப்பு |
en_US |
dc.subject |
வாழ்க்கைப்பாணி மாற்றங்கள் |
en_US |
dc.subject |
சுகாதார வசதியின் கிடைப்பனவு |
en_US |
dc.subject |
நோயின் தீவிரத்தன்மை |
en_US |
dc.subject |
பால்நிலை |
en_US |
dc.title |
உயர்குருதி அமுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும் விளைவுகளும்: நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினை அடிப்படையாகக்கொண்ட ஒரு மருத்துவ சமூகவியல் ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |