dc.contributor.author |
பா. ரோஹினி, சி. சிவகாந்தன் |
|
dc.date.accessioned |
2024-03-14T04:34:08Z |
|
dc.date.available |
2024-03-14T04:34:08Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15131 |
|
dc.description.abstract |
தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் குழுக்களாக இன்று தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளை மதிப்பிடுவதே குறித்த ஆய்வின் நோக்கமாகும். சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வானது கலப்பு முறை ஆய்வு வடிவத்தினைப் பயன்படுத்தி அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுக்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரி நுட்பத்தின் அடிப்படையில் 300 தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் இந்த ஆய்வுக்குத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வின் அனைத்துக் கட்டங்களிலும் ஆய்வு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வினாக்கொத்து, விடய ஆய்வு மற்றும் நேர்காணல் மூலம் முதலாம்நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பணிபுசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. கணியம்சார் தரவுகள் SPSS (version 23) உதவியுடன் விபரணப்புள்ளிவிபரவியல் பகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பட்டது. ஆய்வு முடிவுகளின்படி பெரும்பாலானோர் (55.4%) 31-50 வயதுக்குட்பட்டவர்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் (56.4%) ஆரம்பக்கல்வியைக் கூடப் பெற்றிருக்கவில்லை. பெரும்பான்மையான (88%) தொழிலாளர்களின் மாத வருமானம் 10000-20000 ரூபாவாகும். மேலும், 48.3% ஆனோர் 16-20 வருடங்கள் பணி அனுபவம் கொண்ட தோட்டத் தொழிலாளர்களாக விளங்குகின்றனர். ஆய்வு முடிவுகளின்படி தசைக்கூட்டுக் கோளாறுகள் (78.7%) தோட்டத் துறையில் பெண் தொழிலாளர்களிடம் அதிகளவில் காணப்படுவதாகவும் அதனைத் தொடர்ந்து கழுத்து வலி (15.3%), முதுகுவலி (31.4%), தோள்பட்டை மற்றும் மூட்டு வலி (32.1%) ஆகியவை பொதுவான தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இவர்களில் (43.7%) ஆனோர் மருத்துவ சுகாதார சேவைகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். சமூகக் குடித்தொகைக் காரணியான வயதுடன் (P=0.000<0.02). தோள்பட்டை வலியானது குறிப்பிடத்தக்க தொடர்பைக் காட்டுகின்றது. பெரும்பாலான (62.7%) தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களிடையே ஆரோக்கியத்தை நாடிச்செல்லும் நடத்தை நன்றாக இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிபடுத்துகின்றன. மேலும், இவர்களுக்குத் தனியாள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டபோதிலும், அதனைப் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு (33.3%) குறைவாகவே உள்ளது. தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தடுத்தல் தொடர்பான சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு பரிந்துரைக்கின்றது |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
கொழுந்து பறித்தல் |
en_US |
dc.subject |
தனியாள் பாதுகாப்புக் கருவிகள் |
en_US |
dc.subject |
,தசைக்கூட்டு நோய்கள் |
en_US |
dc.subject |
தொழிற் சூழல் |
en_US |
dc.subject |
நீண்ட நேர வேலை |
en_US |
dc.title |
தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் ஆரோக்கியப் பிரச்சினைகள்: அம்பகமுவப் பிரதேச செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ சமூகவியல் ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |