dc.description.abstract |
பழந்தமிழர் மிகுந்த இரசனையோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு அளித்த இலக்கியமே சாட்சியாகும். அவர்கள் இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை இரசித்ததோடு அன்றி, அவற்றைப் பாதுகாக்கும் குறிப்புகளை இலக்கிய நூல்கள் தோறும் காணமுடிகிறது. சங்க இலக்கியத்தில் நீர் நிறைந்த ஆறுகளையும் நிழல் அமைந்த சோலைகளையும் தண்ணிலவையும் காணமுடிகிறது. சங்க இலக்கியத்தில் தாவரங்கள், செடிகொடிகள் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. சூழ்நிலை தட்பவெப்பம், மழை ஆகியவற்றைக் கொண்டே நிலங்கள் பகுக்கப்பட்டன. இவ்வாறான நிலங்களில் மரம், பூ முதலியவற்றின் பெயர்களை வைத்துதான் திணைகளைப் பிரித்தனர். திணைகள் வாரியாக மரங்களையும், செடிகளையும், கொடிகளையும் பல பயிரின வகைகளையும் பயிரிட்டனர் என்பதை மரபுவழியாக அறியமுடிகிறது. பழங்காலம் தொட்டே மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனிகளாக சேர்த்து அரசர்க்குரிய விருந்தாக கருதி வந்தனர். மருதம், கோங்கு, வேங்கை, மூங்கில் போன்ற மரங்களை வைத்துப் பறை போன்ற கருவிகள் செய்தனர். மூங்கில் மரத்தினைப் பெண்களின் தோளுக்கு உவமித்து 'ஆடுமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர்க் கள்வி' என்று குறுந்தொகை பாடல் கூறுகிறது. கபிலா 90 வகையான பூக்கள் குறிஞ்சி நிலத்தில் இருப்பதாகவும் குறிஞ்சிப்பாட்டின் வழி எடுத்தியம்பியுள்ளார். சங்க இலக்கியத்தில் மரங்கள் மட்டுமின்றி செடி கொடிகளையும் புலவர்கள் பலவாறாகப் பாடியுள்ளனர். பொதுவாக கொடிகளை பெண்களின் சிற்றிடைக்கு உலமை கூறுவதும் உண்டு, இயற்கையாக வளர்ந்த பயிரினங்களைக் கண்டறிந்த மனிதன் நிலவாரியாக பயிர்களைப் பயிரிட்டு உண்டு வாழ்த்தணி என்ற குறிப்பை இலக்கியத்தின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது. நீர்நிறைந்த பகுதிகளில் நெல் போன்ற பயிர்களைப் பயிரிட்டும், நீர்நிலை குறைவான வானம் பர்த்த பூமியில் கம்பு, சோளம், கேழ்வரகு, அவரை, கொள், உழுந்து போன்ற பயிர்களை பயிரிட்டும் விவசாயம் செய்யும் முறையை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது |
en_US |