Abstract:
“தரம் 6 மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தி கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்" என்ற தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது எழுத்துத்திறன் விருத்தி பின்னடைவாக உள்ள போது அது சுற்றலில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கண்டறிவதனை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர்க் கல்விக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மையப்படுத்திய ஓர் அளவை நிலை ஆய்வாகும். ஏறாவூர் கல்விக் கோட்டமானது | AB பாடசாலைகள் நான்கையும் IC பாடசாலை ஒன்றையும் வகை II பாடசாலைகள் ஐந்தையும் வகை III பாடசாலைகள் எட்டிணையும் (18 பாடசாலைகள்) கொண்டு காணப்படுகின்றது. இப்பாடசாலைகளில் இருந்து தரம் 6 வகுப்பினைக் கொண்ட 10 பாடசாலைகளும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. 10 பாடசாலைகளில் இருந்தும் 12 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் தரம் 6 இற்குக் கற்பிக்கும் 82 ஆசிரியர்கள் ஆண், பெண் என்றரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 41 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தரம் 6 வகுப்பினைச் சேர்ந்த 648 மாணவர்கள் ஆண், பெண் என்றரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 5.1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 125 மாணவர்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் மாதிரியாகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 51 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 25 பேர் மாதிரியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து வினாக்கொத்து மூலமாகவும் அதிபர்கள், பெற்றோர்களிடமிருந்து நேர்காணல் மூலமாகவும் அளவு மற்றும் பண்பு ரீதியாகத் தரவுகள் பெறப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன. எழுத்துத்திறள் பின்னடைந்த மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன் இந்நிலைமையானது ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில், மாணவர்களின் எழுத்துத்திறன் விருத்தியினை மேம்படுத்துவதற்கான பொருத்தமான விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன