dc.description.abstract |
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்" என்பது கச்சியப்ப சிவாசாரியார் வாக்கு. இவ்வாக்கிற்கு அமைய இந்து மதத்தின் பல கூறுகளும் பண்பாடுகளும் இன்று மேலைத்தேய கலாசாரம் கொண்ட, இந்து மதத்தோடு தொடர்பில்லாத மேலைத்தேய நாடுகளில் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றன. இந்து மதம் தோன்றி வளர்ந்த எமது நாடுகளைக் காட்டிலும் இம்மேலைநாடுகளில் பெரும் செல்வாக்கினைப் பெற்றுக் காணப்படுகின்றது. இவ்வகையில், இவ்வாய்வானது மேலைத்தேய நாடுகளில் வெளிவரும் அன்புநெறி, ஆத்மஜோதி, கலசம், Journal of Hindu Studies, சிவஒளி, மின்மினி, Hinduism Today ஆகிய இந்து சஞ்சிகைகள் அங்கு புலம்பெயர்ந்து வாழும் இந்து சுதேச மக்களிடத்திலும் அந்நாட்டு மக்களிடத்திலும் இந்து மதக் கருத்துக்களை எவ்வகையில் பரப்புகின்றது என்பதனை ஒருங்கிணைத்துத் தருவதோடு இந்துப் பண்பாட்டினைப் பரப்பும் ஓர் ஊடகமாக எத்தகைய பணிகளை ஆற்றுகின்றது என்பது பற்றியும் அந்நாடுகளில் இந்து மதம் கொண்டுள்ள செல்வாக்கு பற்றியும் தெரியப்படுத்துவதாக அமைந்துள்ளது |
en_US |