Abstract:
அரெ முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான எழுத்தாளராவார். இவ் ஆய்வானது அசெ முருகானந்தனது சிறுகதைகளை உள்ளடக்கரீதியிலும், சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள உத்திமுறைகளின் அடிப்படையிலும் விரிவாக ஆராய்கின்றது ஈழத்துச் சிறுகதை வளரச்சியில் மக்களின் வாழ்வை யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் சிறுகதைகளாக இவரின் சிறுகதைகள் எங்கனம் அமைகின்றன என்பது பற்றியும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் அசெ.முருகானந்தனின் பங்களிப்பு மற்றும் அவரின் சிறுகதைகள் பெறும் முக்கியத்துவம் என்பது குறித்து மதிப்பிடுவதும் ஆய்வின் நோக்கங்கள் ஆகும். அசெ முருகானந்தனது அனைத்துச் சிறுகதைகளும் கிடைக்கப்பெறாமை இவ்வாய்வில் எதிர்கொண்ட சவால் ஆகும்இருப்பினும்,அ.செ.முருகாலந்தனது நூல்களில் வெளிவந்த சிறுகதைகளை மட்டும் இவ்வாய்விற்கு எடுத்துக்கொண்டு, செ.முருகானந்தனது சிறுகதைகள் வெளிவந்த நூல்களை முதல்நிலைத்தரவாகவும் அவர் தொடர்பாக சஞ்சிகைகள், பிறநூல்களில் வெளிவந்த கட்டுரைகளை இரண்டாம் நிலைத்தரவாகவும் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. அசெ முருகானந்தனின் சிறுகதைகளை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தி அவரது சிறுகதைகளில் தனித்துவத்தை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது