Abstract:
"சிரேஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் திறன்வகுப்பறையின் செல்வாக்கு" எனும் தலைப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டங்களில் ஒன்றான மண்முனை வடக்கு கல்விக் கோட்டதை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவைநிலை ஆய்வானது இடம்பெற்றுள்ளது. திறன் வகுப்பறைகள் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் ஏற்படுத்தும் செல்வாக்கினை அறிந்து திறன் வகுப்பறையினை ஆசிரியர்கள் மாணவர்களின் சுற்றல் கற்பித்தலில் பயன்படுத்தாமைக்கான காரணங்களை ஆராய்வதூடாக கல்விச் சமூகத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வினை மேற்கொள்வதற்காக மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தில் உள்ள திறன் வகுப்பறைகள் கொண்ட 9 பாடசாலைகளும் 9 அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், க.பொ.த. சாதாரண தரம் கற்பிக்கும் 311 ஆசிரியர்களினை படையாக்க மாதிரியினை பயன்படுத்தி ஆண், பெண் என வகைப்படுத்தியதன் அடிப்படையில் 109 ஆசிரியர்கள் 3:1 எனும் விகிதத்திற்கமைவாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தரம் 11 கற்கும் 1300 மாணவர்களினை வகுப்புரீதியாக ஆண். பெண்ணாக படையாக்கம் செய்து அதில் இருந்து 10 சதவீதமான 130 மாணவர்களைத் தெரிவுசெய்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானிப்பு மூலமாக அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகள் பெறப்பட்டு ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு. அளவு ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் திறன் வகுப்பறையைப் பயன்படுத்தாமைக்கான காரணங்களாக முறையான பயிற்சிகள் வழங்கப்படாமை. தொழில்நுட்பத்தை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயன்முறையில் ஒன்றிணைக்க முடியாமை, நேரம் போதாமை போன்ற பிரதான காரணங்கள் கண்டறியப்பட்டு பெறப்பட்ட முடிவுகளுக்கு அமைய இளங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கான திரவுகளாக TNA, TIP போன்ற முறைகளும் விதப்புரைகளாக வழங்கப்பட்டுள்ளன