Abstract:
மூதூர் அளஸின் படைப்புகளில் நவீன காவியங்களுக்குத் தனியானதொரு இடமுண்டு. மூதூர் அளைபின் நவீன காவியங்கள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது மூதூர் அனஸ் எழுதிய நவீன காவியங்களை அவற்றின் உள்ளடக்க மற்றும் காவிய வெளிப்பாட்டு முறைமை என்ற அடிப்படையில் ஆராய்கின்றது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பாக நவீன தமிழ்க் காவிய கர்த்தாக்களுள் முதார் அனஸ் குறிப்பிடத்தக்கவர். ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் மூதூர் அளஸின் நவீன காவியங்கள் முக்கியமானவை என்பதோடு இலக்கியதரம் வாய்ந்தவை என்ற வகையில் அவரது காவியப் படைப்பாளுமையை வெளிக்கொண்டு வருவதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. இவரது நவீன காவியங்கள் தொடர்பாக இதுவரை எவ்வித ஆய்வுகளும் இடம்பெறவில்லை. இவ்வாய்வானது விமர்சன மற்றும் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்விற்காக மூதூர் அனஸ் எழுதிய நவீன காவியங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அனஸின் அச்சில் வெளிவந்த நவீன காவியங்கள், கையெழுத்துப் பிரதிகளாகவுள்ள நவீன காவியங்கள். மூததூர் அளஸுடனான நேர்காணல்கள் என்பன முதலாம் நிலைத்தரவுகளாகவும் காவிய ஆய்வுகள் குறித்த நூல்கள், சஞ்சிகைகள், இணையதளங்களில் பிற ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மூதார் அஸிைன் நவீன காவியங்களையும், காவியப் படைப்பாளுமையையும் வெளிக்கொண்டு வருதல் என்ற அடிப்படையில் இவ்வாய்வானது முக்கியத்துவம் பெறுகின்றது