dc.description.abstract |
ஈழத்துச் சமகால தமிழ் அரங்கச் சூழலில் புதிய நுட்பமுறைகள், பயிற்சிகள், கோட்பாடுகள் உருப்பெறுகின்ற நிலையில் பற்றிஸ் பவிஸ் அவர்களால் முன்மொழியப்பட்ட ஆற்றுகைப் பகுப்பாய்வுக்கான வினாக்கொத்து, வினாக்களின் சமகாலச் சாத்தியப்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது. அரங்கவியலாளர்கள் ஆரோக்கியமான ஆற்றுகையைப் பெற அரங்கில் பல அம்சங்களை ஒன்றிணைக்கின்றனர். அந்தவகையில், பற்றிஸ் பவிஸ் அவர்கள் ஆற்றுகையில் காணப்படும் பல அம்சங்களை ஆராய்வதனூடாக வினாக்களை தொடுக்கின்றார். இவ் வினாக்கள் ஈழத்துச் சமகால தமிழ் அரங்கில் ஓர் ஆற்றுகையினைப் பகுப்பாய்வு செய்வதற்கு எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இவ்வாய்வின் நோக்கமாக கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது பற்றிஸ் பவிஸ் உடைய வினாக்கொத்தில் எவ்வாறான அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதனை ஆராய்வதுடன் அவ்அம்சங்கள் சமகாலச் சூழலின் மதிப்பீடு பற்றியும் உற்றுநோக்குகின்றது. இவ்வாய்வில் பற்றிஸ் பவிஸ் உடைய வினாக்கொத்து முதலாம் நிலைத் தரவாகவும் அதனோடு தொடர்புடைய இணையம், வெளியீடு, புத்தகங்கள், பத்திரிகைகள் இரண்டாம் நிலைத்தரவாகவும் அமைகின்றன |
en_US |