dc.description.abstract |
வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளில் இணையவழிக் கற்றல் சாதனங்களின் பயன்பாட்டினைக் கண்டறிந்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்கும் நோக்குடன் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்விற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்து கல்குடா, கல்வி வலயம் நோக்க மாதிரியாக தெரிவு செய்யப்பட்டன. இவ்வலயத்திலுள்ள கோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள 86 பாடசாலைகளிலிருந்து பாடசாலை வகைகள் என்ற அடிப்படையில் படையாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு வகைப் பாடசாலைகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஐம்பது (50%) சதவீதமான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. அந்தவகையில் 1AB பாடசாலைகள் மூன்றும் (3) 1C பாடசாலைகள் நான்கும் (4) வகை-II பாடசாலைகள் பதின்னொன்றுமாக (11) மொத்தம் 18 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இங்கு சிரேஸ்ட இடைநிலைப் பிரிவில் கற்கும் மாணவர்கள் மாத்திரம் ஆண், பெண் பத்துக்கு ஒருவர் (10:1) என்ற விகிதத்தில் குலுக்கல் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் இலகு எழுமாற்று மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டனர், ஆசிரியர்கள் ஒருபாடசாலையில் இரண்டுபேர் வீதம் -36 பேர் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வுக்காக வினாக்கொத்து, அவதானிப்பு. ஆவணங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்கேற்ப ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு அளவுசார். பண்புசார் தரவுகள் இலத்திரனியல் விரிதாள் (Excel), சமூக விஞ்ஞான புள்ளி விபரவியல் பொதி (SPSS, Version-25) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு. வியாக்கியானம், கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவுகளாக இணையவழிக் கற்பித்தல் சாதனங்களை அதன் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஆர்வத்தினை கொண்டிருந்தாலும் பயன்பாட்டின்போது LIGO பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாகவே காணப்பட்டனர். அந்தவகையில் இணையவழிச் சாதனங்கள் போதியனவு இல்லாமை, இணையசாதனம் பற்றிய அறிவு போதாமை, தொழிநுட்ப ரீதியான பிரச்சினைகளை கையாளும் திறன் இன்மை, பயிற்சிகள் போதாமை, தெளிவான சமிக்ஞை இன்மை போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புபட்டுக் காணப்பட்டது. அடுத்து கற்றல்-கற்பித்தல் பிரச்சினைகளாக மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ம (Digital) அறிவு போதாமை, உரியநேரத்தில் பங்குபற்ற முடியாமை, இணையவழியிலான வளங்கள் பாடசாலையில் போதாமை கற்பவர்களின் ஊக்கமின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக காணப்பட்டது. எனவே, இவற்றை நிவர்த்தி செய்வதற்காக அரசு, கல்வி நிறுவனம் அதுதொடர்பான அதிகாரிகள் வளங்களைப் பெற்றுக்கொடுத்தல், பயிற்சிகளை வழங்குதல், அவை தொடர்பில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல், பாடசாலை உட்கட்டமைப்பு தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற செயற்பாடுகளுடாக நிவர்த்திக்க முடியும் என்ற விதந்துரைப்புக்களும் முன்வைக்கப்படுகின்றன |
en_US |