Abstract:
பல்லினக் கலாசாரங்கள் பின்பற்றப்படுகிற இலங்கை நாட்டில் நல்லிணக்கம் என்பது அவசியமாகின்றது . என்பதனால் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு முயன்றாலும் இடையிடையே மோதல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதென்றாகும். அந்தவகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கிடையில் 1915ம் ஆண்டு துளிர்விடப்பட்ட மோதல்கள் யுத்தத்திற்குப் பின்னர் மிக வேகமாக அதிகரித்துள்ளதால் அவை பற்றி ஆராய்வது காலத்தின் தேவையாகவுள்ளது. அத்துடன், இரண்டாம் நிலைத் தரவுகளை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டு, நூல்கள். சஞ்சிகைகள், இணையத்தளங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைகள் என்பவற்றின் துணையுடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்லினக் கலாாரச் சூழலில் இரண்டு இனத்தவர்களிடையேயும் இடம்பெற்ற கலவரங்கள் தனி நபர்கள், தனிக் குழுக்கள் சார்ந்ததாகத் துவங்கிப் பின்னராகச் சமூங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விதத்திலான கலவரங்களாக மாற்றமடைந்தன. பேசித் தீரத்துக்கொள்ள முடியுமான அநேக மோதல்கள் புரிந்துணர்வின்மை, அடிப்படைவாதச் சிந்தனைகள், இனவாதம் என்பன போன்ற பல்வேறு காரணங்களினால் பாரிய கலவரங்களாக வீரியமடைந்தன. மோதல்களால் உடல், உள, சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகப் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டன. அத்துடன் பல்சமய உரையாடல், இளைஞர்கள் மத்தியிலான நல்லிணக்க முயற்சிகள், கல்வித்துறை சார்ந்த செயற்றிட்டங்கள். கலாசார நிகழ்வுகள் போன்ற பல்வேறுபட்ட வழிமுறைகளில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சிங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கிடையில் இடையிடையே பல்வேறு மோதல்களும் அத்துடன் கலவரங்களும் ஏற்பட்ட போதும் கூட நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின் காரணமாக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. எனவே. உரிய திட்டங்களையும், வழிவகைகளையும் மேற்கொள்வதனூடாக மோதல்கள் மற்றும் பிரச்சினைகள் இல்லாத நல்லிணக்கமான சமூகத்தினையும் சூழலையும் உருவாக்கலாம்