dc.description.abstract |
ஆதி மனிதர்களின் அறிவுப் புலத்தின் வளர்ச்சிப் போக்கில் காலத்திற்குக் காலம் பல்வேறு அறிவுச் சாதனங்கள் உருவாக்கியுள்ளன. அவை மனித குலம் நீடித்து வாழ்வதற்குப் பயன்பட்டு இருக்கின்றன. இங்கு அறிவினை விருத்தி செய்யும் அடிப்படையில் ஆரம்பம் இயற்கையாகும். இயற்கை மனிதர் வாழ்வதற்கு அடிப்படையானதாய் அமைவதோடு நாகரிகத்தின் கால கட்ட வளர்ச்சிக்கும் மூலவேராய் அமைகின்றது. இங்கு இயற்கையின் உள்ளீடுகளைப் பயன்படுத்தி குழலிற்குப் பாதிப்பு ஏற்படாவண்ணம் உருவாக்கப்படுவது வெண்கல வார்ப்புத் தொழில் முனைவாகும். நாட்டுப்புற சமூகத்தில் கைவினை கலைகள் மிகவும் சமூகவயப்பட்டதாகும்; பண்பாட்டு வாழ்வின் அங்கங்களாகும். அன்றாட வாழ்வோடு மிகவும் ஒன்றிக் காணப்படுவதாகும். இந்தக் கலைகளின் சமூகவயத் தன்மை என்பது ஒரு சமூகத்திற்குத் தேவையான கலைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கும் அதன்மூலம் அம்மக்கள் தேவைகள் நிறைவு செய்வதற்கும் உள்ள உறவாகும். அதனுடன் கைவினைப் பொருட்கள் வாயிலாக அச்சமூகம் வெளிப்படுத்தும் கருத்துக்கள், விழுமியங்கள், நெறிமுறைகள், பிற கற்பிதங்கள்யாவும் கலையின் சமூகவயப்பட்ட தன்மையை உணர்த்துவனவாகும். உள்ளூர் அறிவியலில் உருவாக்கப்படும் வெண்கல வார்ப்பு வரலாறு, அதன் உருவாக்கமுறை, உருவாக்கும் சமூகம், மட்டக்களப்பில் இதனை முன்னெடுப்போர். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனப் பலவற்றை ஆய்வியல் நோக்கில் ஆராய்கிறது. வெண்கல உலோகக் கைவினையாக்கத் தொழில் முனைவின் உற்பத்திப் பொருட்கள் உருவாக்குவதில் தொடர் பரவாலாக்கத்தின் தொடர்சியின்மையை ஆய்வின் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. வெண்கல வார்ப்பு எனும்போது பயன்பாட்டுப் பொருட்கள், சடங்குப் பொருட்கள், கலைப் பொருட்கள் என்பன உள்ளடங்கும். தமிழ்ச் சமூக பண்பாட்டு வரலாற்றில் அம்மக்கள் செய்யும் தொழில்களின் அடிப்படையில் பல்வேறு சாதிகள் கட்டமைக்கப்பட்டு அவை பரம்பரையாக கடத்தப்பட்டு வந்திருக்கின்றது. இவை தொழில்களின் அடிப்படையில் உயர்ந்த, தாழ்ந்த என்ற எண்ணப்பாடுகளைக் கட்டமைத்து சிந்தனைரீதியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு வார்ப்புக் கலைத் தொழிலைச் செய்கின்றவர்களாக கம்மாளர் எனும் சாதி அமைப்பின் காணப்படுகின்றனர். தசசா, சிற்பி, குயவர், தட்டார், கொல்லர் என ஐவகைத் தொழில்களைச் செய்கின்றவர்கள் கம்மாளர்கள் என கூறப்படுகின்றனர். ஆரம்பத்தில் மேற்கூறிய சமூகத்திற்குரியதாய் இத்தொழில் முனைவு மட்டக்களப்பில் காணப்பட்டாலும் பின்னர் வார்ப்புத் தொழில் முனைவில் விருப்புள்ளவர்களும் முன்னெடுக்கும் தொழிலாக மாறுகின்றது. எனவே, இத்தொழில் முனைவு குறித்த ஒரு சமூகத்தில் இருந்து விடுபடுவதற்கும் அல்லது இக்கலைஞர்கள் விடுபட்டு வெற்றிகராமாக செல்வதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை இன்றைய சூழலில் முன்னெடுப்பதற்கான சாத்தியப்பட்டை நோக்கமாகக் கொண்டு சமகால இலங்கைச் சூழலில் கல்வி முறை மற்றும் ஏனைய தளங்களில் மேற்கொள்ள
வேண்டியவற்றை இவ்வாய்வு நிரூபிக்கின்றது |
en_US |