dc.description.abstract |
இலங்கையைப் பொறுத்தவரையில் மாணவர்களின் வளர்ச்சியில் வினையாட்டுக்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. சமூகத்திற்கு பொருத்தமான நிறமை கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் விளையாட்டுச் செய்ரியாடு முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது. இருப்பினும் மாணவர்களில் விளையாட்டுச் செயற்பாட்டை மேம்படுத்துவதில் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவ் அைைல நிலை ஆய்வானது மணிமுனை தென் எருவில் பற்றுக்கோட்டத்தில் பட்டிருப்பு வலபத்தில் கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாட்டினை மேப்படுத்துவதில் பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை ஏற்படுத்தும் தாக்கத்தினை கண்டறிந்து அதனை, தீர்ப்பதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதனை நோக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கோட்டத்தில் பட்டிருப்பு வலயத்தில் உயை 37 பாடசாலைகளில் இருந்து வசதி மாதிரி எடுப்பின் மூலம் 06 பாடசாலைகள் தேர்வுசெய்யப்பட்டன. இவற்றில் IAB-2, IC-2 வகை 2 பாடசாலைகள் 2 உள்ளடங்கப்படுகின்றன. நோக்கமாதிரியின் அடிப்படையில் 06 அதிபர்களும் 204 மாணர்களும் படையாக்கப்பட்டு இலகு எழுமாற்று மாதிரி மூலமும் அம்மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு 31 எனும் விகிதத்தில் 6 பெற்றோர்களும் 3:1 மனும் விகிதத்தில் 31 ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள், தகவல்கள் பெறப்பட்டு அவை பண்பு ரீதியான மற்றும் அளவு ரீதியாக Microsoft excel படிமுறையின் ஊடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றன. தரவுப் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்ட முடிவுகளாக மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாட்டில் வளப்பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்துகின்றமை, விளையாட்டில் மாணவர்களின் பங்கு பற்றல் குறைதல், திறமைகள் வெளிப்படுத்தாமல் மழுங்கடிக்கப்படல் போன்ற பாதிப்புகள் காணப்படுவதுடன் கற்றறுக்கு வழங்கும் முக்கியத்துவம் போன்று விளையாட்டுச் செயற்பாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்குதம், விழிப்புணர்வூட்டுதல், வளங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தல் முதலிய விதத்துரைப்புக்களும் இவ்வாய்வில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. |
en_US |