dc.contributor.author |
பாலகிருஸ்ணன், சுப்பிரமணியம் |
|
dc.date.accessioned |
2024-03-14T10:16:27Z |
|
dc.date.available |
2024-03-14T10:16:27Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15165 |
|
dc.description.abstract |
எதிர்காலத்திற்கு பொருத்தமான அறிவாற்றலும் ஆளுமையும்மிக்க சந்ததியினரை உருவாக்க பங்களிக்கும் ஆசிரியர்கள் தங்களது வாண்மைத்திறனையும் விருத்தியாக்க வேண்டிய அவசியமாகும். அந்தவகையில் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது ஆசிரியர்களின் வாணமை விருத்திக்கான ஒரு வரப்பிரசாதமாகும். ஆனபோதிலும் பாடசாலை மட்டத்தில் திட்டமிடப்படும் ஆசிரியர்களிற்கான வாண்மை விருத்திச் செயற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால் பாடசாலை செயற்பாடுகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாய்வின் முக்கிய நோக்கம் பா.ம.அ.அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது எதிர் நோக்கப்படும் சவால்களைக் கண்டறிந்து அதனை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கூறுவதாகும். அந்தவகையில் இதேபோன்ற பிரச்சினைக்குட்பட்ட பாடசாலைகளிற்கு நல்லதொரு முடிவுகளை எடுத்துக் கூறக் கூடியதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. இவ்வாய்வானது IC, வகை Il வகை- பாடசாலைகளைக் கொண்டமைந்த ஏறாவூர்பற்று மேற்கு கோட்டத்திலிருந்து நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அளவைநிலை ஆய்வாரும். மொத்தமான 14 பாடசாலைகளிலிருந்து அனைத்து வகை பாட்சாலைகளும் உள்ளடங்கும் விதமாக படையாக்கப்பட்ட மாதிரி எடுப்பு மூலம் 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. அத்துடன் பால் அடிப்படையில் படையாக்கப்பட்டு எளிய எழுமாற்று மூலம் 50 ஆசிரியர்களும், 10 அதிவுகளும் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்வானது பாம அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்தலிலுள்ள சவால்களை அறியும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. கருதுகோள்களை வாய்ப்புப்பார்ப்பதற்கு தேவையான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வினாக்கொத்துக்கள், ஆவணங்கள் பெறுவதற்கான பட்டியம் எனிபன் தயாரிக்கப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் லைக்கேட்டின் அளவீட்டிற்கமைய பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் Chi square Test மூலம் கருதுகோள் வாய்ப்புப் பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் விபரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அளவு சாரா விடயங்கள் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் பல்வேறு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி இவ்வாய்வில் அளவு மற்றும் பணிபு ரீதியிலமைந்த கலப்பு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பருப்பாவுககாக SPSS மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் அட்டவணைகளும் உருக்களும் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவுகளாக ஆசிரியர்கள் பாமஆஅ தொடர்பாக நேரான மவப்பாங்கை கொண்டிருக்கவில்லை, அது தொடரபான அறிவும் விளக்கமும் கொண்டிருக்கவில்லை, அதிபர்கள் பா.ம.ஆ.அ தொடர்பாக பூரண விளக்கமும், பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தலுக்காக அதிபர்கள் உரிய வகிபங்கை வலிக்கவில்லை. ஐந்தாண்டு நிட்டமிடலில் உள்டைக்கப்படும் பாம்.ஆ.அ செயற்றிட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை ஆகிய முடிவுகள் காணப்படுகின்றன. ஆய்வின் முடிவில் அதற்கான விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA |
en_US |
dc.subject |
பாடசாலைலிருத்திக் குழு பாடசாலை முகாமைத்துவ அணி பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி |
en_US |
dc.subject |
பாடசாலை மேம்பாட்டுத்திட்டம் |
en_US |
dc.title |
பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டமும் அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்களும் (ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) |
en_US |
dc.type |
Article |
en_US |