Abstract:
உபொத உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் கலவியைக்கற்று அடைனில் முன்னேற்றம் காவிபரும் பல்கலைக்கழகம் செல்வதும் பின்தங்கிய கிராமங்களில் சவாலாகவே அமைகின்றன. ஈச்சியம்பற்ற வெருகல் பிரதேசத்தில் பல்கலைக்கழக அனுமதிக்குறைவு காணப்படுவதற்கு சமூக பொருளாதாரம் காரணமாக அமைகின்றன. இவ்வாய்வின் முக்கிய நோக்கம் க.பொ.த உயர்தர கலைத்துறை மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்குறைவில் நாக்கம் செலுத்தும் சமூகப்பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான விதப்புரைகளையும் ஆலோசனைகளையும் முன்மொழிதலாகும். நான்கு சிறப்பு நோக்கங்களைக் கொண்டு ஆய்பின் நோக்கம் அடையப்படுகின்றது. இந்த ஆய்வு குறுக்குவெட்டு ஆய்வு முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட ஈச்சிலம்பற்று கல்விக்கோட்டத்தில் உள்ள IAB ஒன்றும். IC வகை பாடசாலை இரண்டும் (02) பாடசாலைகளின் அதிபர் மூன்று பேரும், ஆசிரியர்கள் 65 பேரும் மாணவர்களில் 248 பேரும் நோக்குடை மாதிரியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். பெற்றோர்களில் 124 பேரும் எளிய எழுமாற்று மாதிரி மூலமும் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். வினாக்கொத்து, நேர்முகம் மூலமாக பல தரவுகள் சேகரிக்கப்பட்டு என் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. உயர்தர மாணவர்களின் பரீட்சை அடைவை ஆராய்ந்து கண்டறிந்து, அடைவில் தாக்கம் செலுத்தும் சமூகப்பொருளாதாரக் காரணிகள், கற்றலை மேம்படுத்துவதற்கான உத்திகள் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும்.அளவுரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு இதற்காக Ms office (Excel) முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளிலிருந்து குறிப்பாக ஆண் மாணவர்கள் பாடசாலை செல்லும் வீதம் குறைவாகவே உள்ளது. இதனால் பல்கலைக்கழக அனுமதியும் பரீட்சை அடைவு மட்டமும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அதேவேளை ஆசிரியரது போதனையை ஏற்கும் மன நிலை குறைவாகக் காணப்படுகின்றது. பெற்றோர்களின் கல்வி நிலை ஆம் தரத்திற்கு குறைவாகவே உள்ளது. அத்தோடு குடும்ப வருமானம் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுவதால் குடும்பத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இதனால் மாணவர்களிடையே பல்கலைக்கழகம் செல்வதற்கான சாதகமானநிலை குறைவாக உள்ளது. மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் முறையாக இடம்பெறவில்லை. ஆகவேதான் பாடசாலைகளிலே இதற்கான விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்