dc.description.abstract |
19ஆம் நூற்றாணிடில் ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களை அடையாளம் கண்டு அவற்றிக்கு பரிகாரம் தேடிக் கொடுத்த இலங்கை முஸ்லிம் தலைவர்களுள் ஒருவராக போற்றப்படும். ஐதருஸ் லெப்பை மரிக்கார் அப்துல் அஸீஸ் அவர்களின் பங்களிப்பு: அளப்பரியதாகும். இவ்வகையில் இவ்வறிஞர் மேற்கொண்ட நல்லி, எழுத்துப்பணி, சமய, சமூகப் பணிகள் ஆகியவைகளை வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புரீதியில் அமைந்த இவ்வரலாற்றாய்வு இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகும். மேலும் இவர் தொடர்பாக வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் என்பன மீளாய்வு செய்யப்பட்டன. தந்தையின் ஊடாக கிடைக்கப்பெற்ற அறிவும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த சமூக எழுச்சிக்குப் பங்காற்றிய தலைவர்களின் நட்பும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமான விடயங்களைத் துல்லியமாகக் கண்டறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஆங்கிலக் கல்விக் கொள்கையை முஸ்லிம்கள் எதிர்த்ததன் விளைவாக அதுசார்ந்த பலன்களை இழந்திருந்த சூழ்நிலையில் அறிஞர் எம்.சி. சித்திலெப்பையுடன் இணைந்து சமயச் சூழலில் ஆங்கிலக கல்வியை வழங்க பாடுபட்டு வெற்றிகண்டார். அத்தோடு முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற்றங்காண கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை உருவாக்கியதோடு, அச்சூழலில் ஏற்பட்ட துருக்கித் தொப்பிப் விவகாரத்தை முறையாகக் கையாண்டு தீரவு பெற்று முஸ்லிம்களின் தனித்துவத்தை நிலை நாட்டப் பாடுபட்டார். தனது பத்திரிகைகள் உரைகள் மூலமும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்தல் ஆகியவற்றில் அப்துல் அஸீஸ் ஆற்றிய சேவைகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவைகளாகும். எனவே, முஸ்லிம்களுக்கு வழிகாட்டுவதற்கான தனிமனித ஆளுமைகளின் அவசியம் வலியுறுத்தப்படுவதோடு, அதற்கான முன்னெடுப்புக்கள். வழிகாட்டல்கள் பற்றிய முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொளிவோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது |
en_US |