| dc.contributor.author | சதாத், அப்துல் கரீம் அன்வர் | |
| dc.contributor.author | முஸ்தாக், அப்துல் லத்தீப் முஹம்மது | |
| dc.date.accessioned | 2026-01-05T06:24:27Z | |
| dc.date.available | 2026-01-05T06:24:27Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17335 | |
| dc.description.abstract | சர்வதேச எழுத்தறிவு சங்கத்தின் கூற்றுப்படி, 70 முதல் 85 வரையிலான நுண்ணறிவு அளவைக் கொண்ட குழந்தைகள் மெதுவாகக் கற்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு குழந்தை தனது சிந்தனைத்திறன் தனது நண்பர்களை விட மெதுவான விகிதத்தில் கற்றால் மெதுவாகக் கற்றுக்கொள்பவர் என்று விவரிக்கலாம். புதிய கல்விக் கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் ஆசிரியர்களிடமிருந்து அதிக ஆதாரங்கள் தேவை. மெதுவாகக் கற்பவர்கள் பின்தங்கி விடப்படுகின்றனர், எனவே நூலகங்கள் சமூகத்தோடு இணைந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுவதனால் வருங்கால சமுதாயத்தின் கல்வியறிவை விருத்தி செய்வதிலும் பங்கெடுக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சியை வழங்கி அறிவுமட்டத்தை மேம்படுத்துதல் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது. இவ் ஆய்வுக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்புல எல்லைக்குட்பட்ட சுமார் 40000 மக்கள் தொகையினைக் கொண்ட பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 பாடசாலைகளிலிருந்து தரம் 4 முதல் 5 வரையான 40 மாணவர்கள் ஆய்வு மாதிரிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் வினாக்கொத்து, கள ஆய்வு, அவதானம், போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு இவ் ஆய்வுக்கான தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு எண்ணியல் ஆய்வு அடிப்படையில் சிறந்த பகுப்பாய்வு, மதிப்பீடு, கண்காணிப்பு ஆகிய உத்திகளினூடாக ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டன. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட ஆண்டு 04 முதல் 05 வரையான மணவர்களில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு 03 மாத தொடர் கற்றல் பயிற்சி ஊடாக கற்றல் உபகரணங்களையும் வழங்கி அவர்களுக்குப் பொருத்தமான சிறந்த ஆசிரியரின் ஆலோசனையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கும் ஓர் வினாத்தாளை வழங்கி அதில் அவர்கள் விடையளிக்க வைத்து அதில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் 04 மட்டங்களாக வகைப்படுத்தி அவர்களுக்கு தொடர் கற்றல் உபகரணங்களை வழங்கி நூலகத்தில் வாசிப்பு கிரகித்தல் எழுத்தறிவை மேம்படுத்தல் ஆகிய பயிற்சிகளை வழங்கி முடிவில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அதே வினாத்தாளை விடையளிக்கவிட்டு அவதானித்த போது அதில் பெற்ற புள்ளிகளையும் அவர்களின் எழுத்தறிவு மட்டத்தையும் அவதானித்த போது அவர்களின் வாசிப்பு, கிரகித்தல், எழுதத் றிவு மட்டம் என்பன 70 வீதத்தால் அதிகரித்திருப்பதையும் அவர்கள் கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்களாக மாறி இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனவே, மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறான பொருத்தமான பயிற்சிகளை வழங்கும் போது அவர்களை கல்வியில் நாட்டமுடையவர்களாகவும் சிறந்த எதிர்கால அறிஞர்களாகவும் மாற்றலாம் என்பதுடன், இம்மாணவர்களின் அறிவு மட்டம் மேம்பட்டிருப்பதையும் இதனால், பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களையும் தடுக்கலாம் என்பதுடன், அட்டாளைச்சேனை பிரதேச நூலகங்களின் அபிவிருத்தியில் வாசகர்களின் கரிசனையைத் தூண்டுவதுமே இவ் ஆய்வின் மூலம் பெறப்பட்ட அடைவாகும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Main Library, Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | எழுத்தறிவு | en_US |
| dc.subject | நூலகங்கள் | en_US |
| dc.subject | மெல்லக் கற்கும் மாணவர்கள் | en_US |
| dc.subject | வாசிப்புப்பயிற்சி | en_US |
| dc.title | மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சியை வழங்கிஅறிவு மட்டத்தை மேம்படுத்தல் | en_US |
| dc.type | Article | en_US |