கிழக்கு மாகாணத்திலுள்ள பொது நூலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பயிற்சித் தேவைகளும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும

Show simple item record

dc.contributor.author தவராஜா, சிவராணி
dc.contributor.author ஜெகதீஸ்பரன், லவண்யா
dc.date.accessioned 2026-01-05T07:04:48Z
dc.date.available 2026-01-05T07:04:48Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17344
dc.description.abstract தற்போதைய யுகமானது டிஜிட்டல் யுகமாக நவீனத்துவமடைந்து கொணடி; ருக்கும் இவ் வேளையில் மனிதனது தேவைகளும் மாறுபட்டுக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் அர்ப்பணிப்புள்ள மனிதவள மூலதனதத் pன் பயிற்சி தேவைகள் மற்றும் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் எதிர்நோக்கியிருக்கும் சவால்களை ஆராய்வது இன்றியமையாததாகும். இவ்வாய்வின் நோக்கமானது கிழக்கு மாகாணத்திலுள்ள பொது நூலகங்களில் கடமையாற்றும் மனிதவள மூலதனத்தின் பயிற்சி தேவைகள் மற்றும் சவால்களை ஆராய்தல் பற்றியதாகும். இவ்வாய்விற்கான வினாக்கொதது; தயாரிக்கப்பட்டு நூலகர்கள், நூலக சேவகர்களிற்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் குடியியல் சார்ந்த தகவல்கள், கல்வித்தகைமை மற்றும் பயிற்சித் தேவைகள் சார்ந்த தகவல்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் ளுPளுளு மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு (எண்ணிக்கை, சதவீதம்) பெறுபேறுகள், அட்டவணைகள் மற்றும் வரைபடங்களை பயன்படுத்தி அறிக்கையிடப்பட்டுள்ளன. குடியியல் தகவல்களை நோக்குமிடத்து 201 ஊழியர்கள் இவ்வாராய்ச்சியில் பங்கு பற்றியிருந்தனர். இவ்வாய்வில் பங்கு பற்றிய நூலக ஊழியர்களில் 57.2 சதவீதத்தினர் க.பொ.த உயர்தர கல்வித் தகைமையையும் 30.8 சதவீதத்தினர் க.பொ.த சாதாரணதர கல்வித்தகைமையையும் கொண்டிருந்தமையை அறியமுடிந்தது. ஆயினும் 9.5 சதவீதமானோர் இளமாணிப்பட்டத்தையும் 1.5 சதவீதமானோர் முதுகலை டிப்ளோமாவையும் தங்கள் அதியுயர்கல்வித்தகைமையாகக் கொண்டுள்ளனர். மேலும் இவ்வாய்வில் பங்கு பற்றிய ஊழியர்களில் ஏறத்தாழ 25 சதவீதமானவர்கள் நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் தொழில்சார் தகைமையை பெற்றிருந்தனர். ஆய்வில் பங்கெடுத்தவர்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பொது நூலகங்களில் பணியாற்றுபவர்களில் அதிகளவானோர் பெண்களாக காணப்படுகின்றனர் (78மூ). எனினும் நூலகர் தரம் ஒன்றில் மிகக்குறைவான எண்ணிக்கையினரே காணப்படுகின்றனர். பயிற்சி தேவைகளை நோக்குமிடத்து அதிகளவானோர் அடிப்படைக் கணினி மற்றும் தகவல்தொழில்நுட்பம் (68.2மூ), நூலகப் பகுப்பாக்கம் (67.2மூ), நூலகத் தன்னியக்கமாக்கம் (62.7மூ), நூலக பட்டியலாக்கம் (61.2மூ) ஆகிய விடயங்களில் தங்களுக்கு பயிற்சிகள் தேவை எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலதிகமாக சிங்கள பயிற்சி நெறி, ஆங்கில பயிற்சி நெறி, செயற்கை நுண்ணறிவு, நூலக ஆவணப்பாதுகாப்பும் பேணுகையும், நூல்களுக்கு மட்டை கட்டுதல் போன்ற விடயங்களிலும் தங்களுக்கு பயிற்சிகள் தேவை என குறிப்பிட்டுள்ளனர். மனித வள மூலதனத்துடன் தொடர்புடைய சவால்களை ஆராயும் போது பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான போதிய வாய்ப்புக்கள் இல்லை (75.1மூ), பொது நூலகங்களில் பதவி உயர்விற்கான சந்தர்ப்பங்கள் குறைவு (72.4மூ), அதிக வேலைப்பளு (65.5மூ), பணிகளுக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைப்பதில்லை (60.6மூ), ஆட்சேர்ப்பு உரிய நேரத்தில் நடைபெறுவதில்லை (59.3மூ) என்பன முன்னிலை வகிக்கின்றன. பரிந்துரைகளை நோக்குமிடத்து அவரவர் பதவிக்கேற்ப பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவது, ஊழியர்களின் மொழியினைக் கருத்தில் கொண்டு பயிற்சிப்பட்டறை நடாத்துதல், அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்கு ஒரு தடவை பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற விடயங்களை கருதத் pல் கொள்வதன ; மூலம் ஊழியர்களின் பயிற்சி பட்டறைகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முடியும். மேலும் காலத்திற்கு காலம் சுற்றறிக்கைகளையும் நூலக கொள்கைகளையும் மீள் திருத்தம் செய்வதன் மூலம் நூலக ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்களை நிவர்த்தி செய்யமுடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Main Library, Eastern University, Sri Lanka en_US
dc.subject பொது நூலகம், en_US
dc.subject மனிதவளம், en_US
dc.subject பொது நூலக ஊழியர்கள், en_US
dc.subject சவால்கள், en_US
dc.subject பயிற்சி தேவைகள் en_US
dc.title கிழக்கு மாகாணத்திலுள்ள பொது நூலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பயிற்சித் தேவைகளும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • IRCL 2025 [29]
    Proceedings of International Reserach Conference of the Library 2025

Show simple item record

Search


Browse

My Account