| dc.description.abstract |
ஒரு நூலகத்தின் செயற்பாடனது தன்னை நாடி வரும் வாசகருக்கு வேண்டிய நூல்களை
வழங்குவதுடன் மாத்திரம் நின்றுவிடுவதில்லை அதற்கு அப்பாலும் தன் எல்லைகளை
விரிவடையச்செய்து வருகின்றது. அந்த வகையில் இவ்வாய்வின் நோக்கமானது
வவுணதீவு பிரதேச கல்வி வளர்ச்சியில் நூலகங்களின் பங்களிப்பையும் அதன்
சவால்களையும் ஆராய்வதாக அமைகின்றது. இந்த ஆய்விற்காக வவுணதீவு பிரதேச
எல்லைக்குட்பட்ட 07 பொதுநூலகங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இங்கு
அமையப்பெற்ற பொதுநூலகங்களில் கடமையாற்றும் நூலகசேவகர்கள் (07), நூலக
ஆலோசனைக்குழு (30), வாசகர் வட்டக்குழு (40), பாடசாலை மாணவர்கள் (80) என
மொத்தமாக 157 பேரிடமிருந்து நேரடியாகவும், வினாக்கொத்து மூலமாகவும் தகவல்கள்
பெறப்பட்டன. இவ்வாய்வின் முடிவுகளாக நூலகங்களினால் பிரதேச மக்களின் கல்வி
வளர்சிக்காக மேற்கொள்ளப்பட்ட விடயங்களாக பாடசாலை மாணவர்களுக்கான
கருத்தரங்குகள், நடமாடும் நூலகசேவை, விழிப்புணர்வுக ; கருத்தரங்கு,
வினாவிடைப்போட்டி, சிறுவர் கதைகூறல், பத்திரிகைப்போட்டி, பாடசாலை
மாணவர்களுக்கான கடந்த கால வினாக்கள் அடங்கிய நூல்களை பாடசாலையில்
காட்சிப்படுத்துதல். பாடங்களில் மெல்லக்கற்கும் மாணவர்களை இனங்கண்டு
மாலைநேர வகுப்பு நடாத்துதல், நன்றாகக ; கற்கும் மாணவர்களை ஊக்குவித்தல்,
விசேடதேவையுடைய மாணவர்களுக்கான நூல்களை வழங்குதல், வருடத்தில்
ஒருமாதம் முழுவதுமாக இலவச அங்கத்துவம் வழங்குதல், வாசகரின் தேவையறிந்து
தகவலினை விரைவாக வழங்குதல் போன்ற விடயங்களினை குறிப்பிடலாம். வாசகரின்
தேவையறிந்து சேவைகளை வழங்குகின்ற போதிலும் வினைத்திறனான
சேவைகளை வழங்க சில விடயங்கள் தடையாக உள்ளமையும்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் அனைத்து நூலகங்களிலும் தனியொரு
நூலக சேவகரினால் மட்டுமே நூலக செயற்பாடுகள் அனைத்தும் இடம் பெறுகின்றது.
தகுதி வாய்ந்த ஊழியர்கள் இல்லாமை, நூலக பொறுப்புகளை சுகாதாரத ;
தொழிலாழியிடம் ஒப்படைத்தல், நிதிப்பற்றாக்குறை, ஆளணிப்பற்றாக்குறை, இன்றய
தகவல் வளங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையில் இங்கு காணப்படும் எந்தவொரு
நூலகங்களிலும் கணினி மற்றும் இணைய வசதிகள் இல்லாமை, புதிய பாடத்திட்டங்களுக்கான புத்தகங்கள், சட்டமூலங்கள், மாதாந்த சஞ்சிகைகள், ஈழத்து
எழுத்தாளர்களின் நூல்கள் என்பன போதியளவு இல்லாமை, நவீன இலத்திரனியல்
சாதனங்கள் இல்லாமை, பயிற்சி பெற்ற ஊழியர்கள் குறைந்தளவில்
காணப்படுகின்றமை என்பன பாரிய சவால்களாக காணப்படுகின்றன. அதே வேளை
நூலகவியலில் தேர்சச் pயான பணியாளர்கள் பற்றாக்குறை நூலக சேகரிப்பில் உள்ள
நூல்கள் காலம் கடந்தவையாகவும் மாணவருக்கேற்றதல்லாதவாறாக இருக்கின்றமை.
நிர்வாகிகள் நூலகஅபிவிரித்திக்கு வழங்கும் ஒத்துழைப்பு குறைந்தளவில்
காணப்படுகின்றது. பிரதேச மக்களின் ஒத்துழைப்பில் கணிசமான அளவில்
காணப்படுகின்றது. கடமையாற்றும் மொத்த நூலக சேவகரில் ஒருவர் மட்டுமே
நூலகவியல் உயர் டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளமை என்பனவும் இவ்வாய்வில்
கண்டறியப்பட்ட பிரதான விடயங்களாகும். உள்ளூராட்சி மன்றங்கள்
பொதுநூலகங்களை முக்கிய அம்சமாக கருத்தில் கொண்டு அதற்கான நிதி வளத்தினை
வழங்குவதோடு தொழில்முறை தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கான கணினி
மற்றும் இணையவசதிகளையும் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் நூலக
ஊழியர்களினால் வினைத்திறனான நூலக சேவையை வழங்கமுடியும். அத்துடன்
நூலக ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்தல், நூற்கொள்வனவின் போது
நூலகதத் pல் கடமையாற்றும் உதத் pயோகத்தர்களை இணைதது; க்கொள்ளல்,
விசேடதேவையுடையவர்களுக்கான நூல்களைக் கொள்வனவு செய்தல் என்பன இவ்
ஆய்வின் பரிந்துரைகளாகும். |
en_US |