| dc.description.abstract |
பொது நூலகங்கள் முக்கியமான தகவல் மையங்களாகச் செயல்படுவதுடன் பயனர்களுக்கு பரந்த அளவிலான வளங்கள், சேவைகளுக்கான அணுகலை வழங்குகின்றன. இருப்பினும், அவற்றின் தாய் நிறுவனங்களான உள்ளூராட்சி மன்றங்களை பொது நிருவாக அமைச்சு மதிப்பீடு செய்வதற்காகப் பயன்படுத்தும் செயலாற்றுகை மதிப்பீட்டுக் கருவிக்கமைவாக (Perfect 2.0 Assessment) பொதுநூலகங்கள் அனைத்தும் நூலக சேவைகளைத் தாண்டிய செயற்பாடுகளில்
ஈடுபடவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தேவைகளுள் ஒன்றாக உள்ளூர் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உந்துதலளிக்க வேண்டியுள்ளதால் பயனுள்ள ஆராய்ச்சி தரவு முகாமைத்துவத்தை (Research Data Management - RDM) பொது நூலகங்களில் நடைமுறைப்படுதத் வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
குறிப்பாக, பிராந்திய அடிப்படையிலான உள்ளூர் ஆராய்ச்சி, பொதுநூலகத்தில் வழங்கப்படும் இரண்டாம் நிலைத் தரவைப் பெரிதும் நம்பியுள்ளது. இருப்பினும், இந்தத்தரவு பல்வேறு உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், அரசு மற்றும் அரசசார்பற்ற திணைக்களங்கள், நிறுவனங்களில் தனித்தனியாக சிதறடிக்கப்படுகிறது.
பொதுநூலகங்கள் இவ்வாராய்ச்சித ; தரவுகளை சேகரிதத் ல், சேமித்தல், பாதுகாத்தல் மூலம் அவற்றின் பயனர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்ற முடியும். அந்தவகையில் இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுநூலகங்களில் RDM இனை நடைமுறைப்படுத்தலின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை
வழங்குவதோடு பொதுநூலகர்கள் இவ்விடய ரீதியாக எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள், வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாய்வானது அளவறி ஆய்வு முறையில் மேறn; காள்ளப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் இலங்கை
தேசிய நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து (83) பொது நூலகங்களின் நூலகர்கள் அல்லது நூலகப்பொறுப்பாளர்கள் இவ்வாய்வுக்குக் உட்படுத்தபட்டனர். தரவைச் சேகரிக்க நிகழ்நிலை வினாக்கொத்து (கூகிள் படிவம்) பயன்படுத்தப்பட்டது. Excel விரிதாள் ஐப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மொத்தமாக 60
பதில்கள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 6.67% தரம் II நூலகங்களும், 93.33% தரம் III நூலகங்களும் உள்ளூராட்சிமன்றங்களினால் நிருவகிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. இந்நூலகங்களுள் 30ம% நூலகர்களாலும், 57% நூலக சேவகர்களாலும் 13ம% சாதாரண ஊழியர்களாலும்
நிர்வகிக்கப்படுகின்றன. இவர்களுள், நூலகர்களில் 7% மட்டுமே பட்டம்
பெற்றுள்ளனரெனினும், அவர்களிலெவரும் நூலக தகவல் விஞ்ஞானத் LIS துறையில் பட்டத்தினைப் பெறவில்லை என அறியப்பட்டது. 20ம% LIS இல் டிப்ளோமா பெற்றுள்ளனர், 56% க.பொ.த (உ/த) தகுதியையும், 5% பேர் க.பொ.த (சா/த) தகுதியையும் கொண்டுள்ளனர். பதிலளித்தவர்களில் 36.7% செய்தித்தாள் கட்டுரைகள், அறிக்கைகள், நூல்களை அணுகுவதனால் தாம் பெற்றுக் கொண்டுள்ள அறிவின மூலம் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கணிசமானோர் (73.33%) RDM பற்றி அறிந்திருக்கவில்லையென்றும்,
பதிலளித்தவர்களுள் அனைவரும் (96.67%) தங்கள் நூலகங்களில் RDM ஐ
செயல்படுத்தவில்லையென்றும், எனினும் அனைவரும் RDM சேவைகளில்
ஈடுபடுவதில் தாம் வலுவான ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நூலகர்களிடையே காணப்படும் வரையறுக்கப்பட்ட திறன்,; RDM பற்றிய
புரிதலில்லாமை, ஆராய்ச்சியில் போதுமான அனுபவமில்லாமை, சரியான
வழிகாட்டுதல் மற்றும் ஆதரவில்லாமை என்பன பொதுநூலகங்களில் RDM ஐ செயல்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்களாக இணம்காணப்பட்டன. பொதுநூலகர்களுக்கு தரவுகளுடன் பணியாற்றுவதற்கும், RDM சேவைகளை மேற்கொள்ள தேவையான அறிவு, திறன்களை வளர்ப்பதற்கும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு தாய்நிறுவனங்கள் ஆதரவான சூழலை உருவாக்கவேணடு; மென இவ்வாய்வு பரிந்துரைக்கிறது. மேலும் பொதுநூலகர்கள்
தங்கள் தாய்மொழிகளில் ஆராய்ச்சியை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். நூலகர்கள் RDM தொடர்பாக தங்கள் அறிவைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வதன் மூலமும் பொதுநூலகர்களுக்கு RDM பற்றிக் கற்பிப்பதன் மூலமும், நூலகங்களில் RDM ஐ வெற்றிகரமாகச் செயல்படுத்தலாம் என இவ்வாய்வின் மூலம்
உணரப்படுகிறது. |
en_US |