| dc.description.abstract |
அறிவு ஒழுங்குபடுத்தலில் முதன்மை பெறுகின்ற நூலகங்கள் தமது வாசகர்களின் தரத்திற்கேற்ற சேவைகளை வழங்க வேண்டிய நிலையிலுள்ளன. ஏனைய நூலகங்களைப் போலல்லாமல் பொதுநூலகங்கள் சிறுவர்கள் முதல் சிரேஷ்ட பிரஜைகள் வரை, பாமரர் முதல் பணடி; தர் வரையென தமது வாசகர்களின் தேவை கருதி பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியுற வேணடி; யுள்ளன. 1996 ஆம் ஆண்டின்
28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமானது பாகுபாடு காட்டாததில் கவனம் செலுத்தல், விஷேட தேவைக்குட்பட்டோருக்காக பொதுவான தேசிய சபையினை உருவாக்குதல், விஷேட தேவைக்குட்பட்டோருக்குப் பொருத்தமான அணுகல் வசதிகள் குறித்து வலியுறுத்தியுள்ளபோதிலும் இதுவரையில்
அரச நிறுவனங்கள் இது குறித்து பெருமளவில் கவனம் செலுத்தாமலுள்ளமை கவலைக்குரியதே. எனினும், தற்போது இச்சடட் மானது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான செயலாற்றுகை மதிப்பீடுகள் இடம்பெறும் போது இத்தகைய விடயங்கள் மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்யப்படுகின்றன. இதனால்
உள்ளூராட்சி மன்றங்களின் சேய் நிறுவனங்களாக செயற்படும் பொது நூலகங்களும் விஷேட தேவைக்குடு;பட்டோருக்கான நூலக சேவைகளை வழங்குவதில் அக்கறை செலுத்த வேணடியுள்ளது. எனவே பொதுநூலகங்களில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான நூலக சேவைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இவ்வாய்வு ஆராய்கின்றது. விஷேட தேவைக்குட்பட்டோருக்கான நூலக சேவைகளை வழங்குவதிலுள்ள சவால்களை இனங்காணுதல், இத்தகைய
சேவைகளை வழங்குவதற்கான திறன்களை விருத்தி செய்தல், இவ்வாறான சேவைகளை வழங்குவதற்கு உதவி புரியும் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாகும். இதன் மூலம் பொதுநூலகங்கள் அனைவரையும் உள்வாங்கிய சேவைகளை முன்னெடுத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களாக உருவெடுக்க முடியுமென்பது திண்ணம். இவ்வாய்வானது பண்பறி ஆய்வு முறையில் ஏறாவூர் நகர சபையின் பரிபாலனத்திற்குட்பட்ட 04 பொது நூலகங்கள், 02 வாசிப்பு நிலையங்களில் கடமையாற்றும் 21 நூலக உத்தியோகத்தர்களுடனான நேரடி நேர்காணலிருந்து
சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. தரவைச் சேகரிப்பதறகு; கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டது. பெறப்பட்ட தரவு EXCEL விரிதாள், SPSS ஐப் பயன்படுத்தி பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டது. ஏறாவூர் நகர சபையின் பொதுநூலகங்கள், வாசிப்பு நிலையங்களுள் 16.66%
நூலகராலும் 66.68மூ நூலக சேவகராலும், 16.66% ஏனைய ஊழியர்களாலும்
நிர்வகிக்கப்படுகின்றன. பதிலளித்த அனைத்து நூலக உதத் pயோகத்தர்களும் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான நூலக சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ள போதிலும் போதிய பயிற்சியின்மை காரணமாக
இத்தகைய சேவைகளை வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக அறிய முடிகிறது. ஏறாவூர் நகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மொத்தமாக 505 விஷேடதேவைக்குட்பட்டோர் காணப்படுகின்ற போதிலும் செவிப்புல விஷேட தேவைக்குட்பட்டோர் மிக அரிதாகவே (0.99%) நூலக சேவையைப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். அவர்களுள் 60% உசாததுணைப் பிரிவையும், 20% வாசிப்புப் பிரிவையும், 20% சிறுவர் பிரிவையும் பயன்படுத்துவதாகவும் விஷேட தேவைக்குட்பட்டோருள் 1.20% வாசகர் வட்ட உறுப்பினர்களாகச் செயற்படுவதாகவும் தெரிவித்தனர். பதிலளித்த அனைத்து நூலக உத்தியோகத்தர்களும் அதிகுறைந்தது
க.பொ.த (சா/த) தகுதியைக் கொண்டுள்ள போதிலும் சைகை மொழி, குத்தெழுத்துப் பயிற்சியில் போதிய அனுபவமில்லாமல் காணப்படுகின்றனர். இது ஏறாவூர் நகர சபைப் பொதுநூலகங்களில் தனியே விஷேட தேவைக்குட்பட்டோருக்கான பிரிவினை உருவாக்குவதற்கு பாரிய சவாலாக உள்ளது. இத்தகைய பயிற்சிகள் முறைப்படி வழங்கப்பட்டு ஏறாவூர் நகர சபையின் அனைத்து பொது நூலகங்களிலும் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான நூலக சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இவ்வாய்வு பரிந்துரைக்கின்றது. இலங்கையில் The Employer’s Federation of Ceylon (EFC) அமைப்பு 1999 ஆம் ஆண்டு முதல் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வசதிகளை வழங்கக்கூடிய கற்கைகளை வழங்கி வருகின்றது. அத்துடன் பெரிய எழுத்துப் புத்தகங்கள் (Large Font Books) குத்தெழுத்துப் புத்தகங்கள் (Braille Books ), குத்தெழுத்து நாட்காட்டிகள் (Braille Calendars), ஒலிப்புதத்கங்கள் என்பவற்றையும் சைகைமொழி (Sign Language), குத்தெழுத்து (Braille Language) பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது. இவற்றினை மூலங்களாகக் கொண்டு ஏறாவூர் நகர சபைப் பொதுநூலகங்கள் விஷேட
தேவைக்குட்பட்டோருக்கு திருப்திகரமான நூலக சேவையை வழங்க இவ்வாய்வு பரிந்துரைக்கின்றது. |
en_US |