Abstract:
உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை. கிராமத்துக்கு கிராமம் சிறந்த நூலக சேவைகளை வழங்கும் நிறுவனமாக பொதுநூலகங்கள் விளங்குகின்றன. அந்த வகையில் கோட்டைக்கல்லாறு பொதுநூலகமும் தனது நூலக சேவையினை கிராம மக்களுக்கு சிறப்பாக ஆற்றி வருகின்றது. இதன் பிரகாரம் கோட்டைக்கல்லாறு பொதுநூலகத்தின் செயற்பாடுகளும் அதன் சவால்களும் என்ற கருப்பொருளில் இவ்வாய்வு அமைந்திருக்கின்றது. நூலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கோட்டைக்கல்லாறு கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏறப் டுத்துவதுடன் நூலகத்துடன் இணையாத வாசகர்களை இனம் கணட் றிந்து அனைவரும் இன் நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இவ்வாய்வு முறையானது
கோட்டைக்கல்லாறு கிராமத்திலுள்ள சனத்தொகையில் எழுமாற்று முறையில் 225 குடியிருப்பாளர்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டதுடன் நாளந்த வாசகர்களுக்கான அபிப்பிராயப் பதிவேடு பேணப்பட்டும், நேர்காணல் முறைகளினூடாகவும் தரவுகள் பெறப்பட்டன. குறிப்பாக இத ; தரவுகள் அனைத்தும் பாடசாலை, அதிபர்கள், ஆசிரியர்கள், நூலக அங்கத்தவாக் ள், ஆலோசனைக்குழு, வாசகர் வட்டத்தினா,; மற்றும் சிறுவர் வாசகர் வட்டத்தினா,; ஆலயங்களின ; குடித்தலைவாக் ள் நாளாந்த வாசகர்கள். நூலகத்தை அண்டி வாழும் நலன் விரும்பிகள், அனைவரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இத் தரவுகளின் அடிப்படையில் 61வீதம் மிக நன்று 29வீதம் நன்று 10வீதம் திருப்தி என்று வினாக்கொத்தின் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவாக பாடசாலை மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கும், கையடக்க தொலைபேசி பாவனையினாலும் நூலகத்தை பயன்படுத்துவது குறைவாக காணப்படுகின்றது. கட்புல
செவிப்புல சாதனங்கள் இன்மை, நூலகத்தில் போதியளவு இடவசதியின்மை, ஆளணிப் பற்றாக்குறை போதியளவு வளங்கள் இன்மை நவீன தொழினுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நூலகம் இலத்திரனியல் நூலகமாக மாற வேண்டும் நூலகத்தில் கடமையாற்றுபவர்கள் நூலகவியல் மற்றும் மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக மாற வேணடும், வாசகர்களின் நேரம் பேண வேண்டும் பிரதேச சபையானது வருடாந்தம் நூற்கொள்வனவு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
விரிவாக்கல் சேவைகளை மேற்கொள்வதற்கு வளங்கள் பறற் hக்குறை அனைத்து துறைகளுக்குமான நூல்கள் பற்றாக்குறை, பருவ இதழ்கள,; பத்திரிகைகள் குறைவாக காணப்படல் புதிய பாடத்திட்ட நூல்கள் குறைவாக காணப்படல் போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் மெல்லக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்து
செயல்படுத்தும் படி கூறப்பட்டது. கிராம மக்களின் பின்னூட்டங்களின் பிரகாரம் தாய் நிறுவனமானது தங்களின் கீழ் உள்ள உதத் pயோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கி மக்கள் மத்தியில் தரமான சேவையை வழங்க தங்களின் வரவு செலவு திட்டத்தில் நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களின் பின்னூட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும,; தரம் வாய்ந்த நூலகாக் ளை நியமிக்க வேண்டும், தேசிய
வாசிப்பு மாத செயற்றிட்டங்களையும் வருடாந்த திட்டங்களையும் நெறிப்படுத்த தாய் நிறுவனம் மற்றும் கிராமத்தில் உள்ள நன்கொடையாளர்கள் முன் வர வேண்டும். நூலக செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணாi; வ ஏற்படுத்தி விரிவாக்கல் சேவைகளை
மேற்கொள்வதனூடாக தகவல் வளங்களின் தேவையை நூலக செயற்பாடுகள் மூலம் வழங்க முடியும் என்பது ஆய்வின் பிரதான பரிந்துரையாகும்.