| dc.contributor.author | கஜேந்திரதாஸ், அல்பிரேட் | |
| dc.date.accessioned | 2026-01-08T04:46:13Z | |
| dc.date.available | 2026-01-08T04:46:13Z | |
| dc.date.issued | 2025 | |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17350 | |
| dc.description.abstract | மனிதனானவன் அறிவையும் அறிவியல் சார்ந்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளவும் தன்னைத்தானே விருத்தி செய்துகொள்வதற்குமுரிய ஒரு கல்வி மேம்பாட்டுத் தளமாக நூலகக் கற்றல் மற்றும் தகவல் அணுகுமுறைகளானது காணப்படுகின்றது. இவ்வகையில் பல்துறை சார் ஆவணங்களினை நூலகங்கள் கற்றலுக்காகவும் தகவல் அணுகலுக்காகவும் கொண்டு அமைந்துள்ளது. குறிப்பாக இசைக்கருவி சார் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான தளங்களுள் முக்கியமானதொன்றாக நூலகங்கள் சமகாலப் பரப்பில் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் இவ் ஆய்வானது இசைக்கருவிகளினை எண்ணிமைப்படுத்தப் பட்ட கற்கும் போது இத்துறைசார் நூலக ஆவணங்களின் வகிபங்குகினையும் அவ் ஆவணங்களினை எண்ணிமைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தினையும் அவ்வாறு எண்ணிமைப்படுத்தப்படுவதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைகின்றது. இவ் ஆய்வுக்காக விபரண ஆய்வு முறைமையானது பயன்படுத்தப்படுவதோடு இதற்காக பல்வேறு இசைக்கருவி சார் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட ஆவணங்கள் ஆழமாக கருத்திற் கொள்ளப்பட்டு அவதானிப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆய்வுத் தரவுகள் விபரண ஆய்வுக்குபடுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் நூலகங்களில் இசைக்கருவி சார் தகவல் வளங்களினை எண்ணிமைப்படுத்தும் போது ஆய்விற்காக அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலான ஆவணங்கள் இசைக்கருவியின் அடிப்படையான விடயங்களினை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பது தெளிவாகின்றது. எவ்வாறாயினும் இவ் ஆய்வில் இசைக்கருவி வாசிப்பில் நேர்த்தியான விரல் பிரயோக முறைமையினை வெளிப்படுத்துவது என்பது தளர்வானதாகவே காணப்படுகின்றது என்பதனை இவ் ஆய்வானது முடிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. எனவே இம்முடிவுகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட சில வழுக்களினை நீக்கி எண்ணிமைப்படுத்தல் மூலமாக இசைக்கருவி கற்கும் மாணவர்களுக்கு முழு நிறைவான சேவையை வழங்குவதற்கான சிபார்சுகளையும் இவ் ஆய்வானது முன்னிலைப்படுத்துகின்றது. அந்த வகையில் மருவி வரும் இசை, இசைக்கருவி நுட்பங்களினை எண்ணிமைப்படுத்தும் போது வாத்திய இசையில் பிரதானமாகவும் நுணுக்கமானதாகவும் காணப்படும் விரல் பிரயோக முறைமையில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றினை எண்ணிமைப்படுத்தும் பொழுது நூலகங்களின் ஊடாக இசைக்கருவி சார்எண்ணிமைப்படுத்தப்பட்ட காணொளி ஆவணங்களின் மூலம் முழு நிறைவான பயனை பெறக் கூடும் என இவ் ஆய்வானது கருதுகின்றது. மேலும்; இசைக்கருவி வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான விரல் முறைப் பிரயோகத்தினை முக்கியத்துவப்படுத்தி எண்ணிமைப்படுத்தல் சார்ந்து உருவாகின்ற வெளிப்பாடுகள் தற்போது உள்ள நிலையினை விட நூலக எண்ணிமைப்படுத்தப்பட்ட தகவல் சாதனங்களின் ஊடாக இசைக்கருவி கற்கும் மாணவர்களுக்கு கூடுதலாக பயனை பெற வழி வகுக்க உதவியாக இருக்கும் என இவ்வாய்வானது சிபாரிசு செய்கின்றது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Main Library, Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | ஆவணப்படுத்தல் | en_US |
| dc.subject | எண்ணிமைப்படுத்தல், | en_US |
| dc.subject | நூலகக்கற்றல், | en_US |
| dc.subject | இசைக்கருவி, | en_US |
| dc.title | நூலகக் கற்றல் செயற்பாட்டிற்கு ஏற்பவாறு மருவி வரும் இசை, இசைக்கருவி நுட்பங்களினை எண்ணிமப்படுத்துதல் | en_US |
| dc.type | Article | en_US |