| dc.description.abstract |
நூலகங்கள் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. தகவலின் அதிவேக விரிவாக்கத்திற்கு ஈடு கொடுக்கும் முகமாக நூலகங்கள் புதிய மாற்றங்களையும் தகவல் பரிமாற்றங்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டியது
இன்றைய காலத்தின் தேவை ஆகும். நூலகங்கள் மாணவர்களையும்
வாசகர்களையும் கவரும் வண்ணம் அமைய பெற்றிருப்பதோடு அவை தமது வெளிக்களச் செயற்பாடுகள் மூலம் வாசகர்களை நூலகத்தை நோக்கி ஈர்க்கவேண்டும். இந்த வகையில் இந்த ஆய்வுச் சுருக்கமானது காத்தான்குடி பொதுநூலகம் மேற்கொண்ட வெளிக்களச் செயற்திட்டத்தினையும் அதன்மூலம் பெற்றுக்கொணட்
அனுபவங்களையும் தருகிறது. இந்தச் செயற்றிட்டமானது நூலகத்திற்கான
மாணவர்களின் வருகையையும் வாசிப்பு பழக்கத்தையும் கல்வி நடவடிக்கைகளையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொணடி; ருந்தது. இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் பின் தங்கிய நிலையில் உள்ள
ஆரம்ப பிரிவு, இடைநிலை பிரிவு பாடசாலைகள் ஏழு இனம் காணப்பட்டது.
இப்பாடசாலைகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு நூலகம் மற்றும் நூலக பிரிவுகள் பற்றியும் அங்கு வழங்கப்படும் சேவைகள் பற்றியும் வகுப்பு ரீதியாக மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மாணவர்கள் நூலகத்திற்கு சமூகமளிக்கவும் ஊக்குவிக்கப்பட்டனர். இக்கலந்துரையாடலில் போது 35% மாணவர்களிற்கு நூலகதத் pற்கு வருகை தரவதறக் hன போக்குவரத்து வசதி இன்மை, போதியளவு
பொருளாதாரம் வளங்கள் இன்மை, பெண்பிள்ளைகள் தனிமையில் பயணம் செய்வதில் உள்ள சிரமங்கள், பெற்றோரின் ஆதரவு இன்மை என்பன அவதானிக்கப்பட்டன.
இக்கள விஜயத்தின் பின்னர் இம்மாணவர்கள் நூலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்காக சித்திர வகுப்புகள், கைவினை பொருட்கள் செய்யும் வகுப்புகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புகள், சதுரங்க பயிற்சி வகுப்புகள் போன்றன ஒழுங்கு
செய்யப்பட்டன. இம்மாணவர்களின் பெற்றோருக்கும் உளவள கருத்தரங்குகள் மற்றும் சுய தொழிலுக்கான ஆரி கலையுடன் கூடிய தையல் வகுப்புகள் முன் எடுக்கப்பட்டன.
வறுமை கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களிற்கு இலவச அங்கத்துவம் வழங்கப்பட்டது. செயற்றிட்ட முடிவில் நூலகத்திற்கான மாணவர்களின் வருகை அதிகரித்ததுடன் நூலக அங்கதது; வமும் அதிகரித்தது. மாணவர்களும் விருப்பத்துடன் இப் பயிற்சி வகுப்புகளில்
கலந்து கொணட் னர். நூலகங்களில் நடைபெறும் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வுகளிலும் விஷேட தினங்கள் இடம் பெறும் நிகழ்வுகளிலும் (சிறுவர் தினம், சுற்றாடல் தினம், அன்னையர் தினம்) கலந்து கொண்டனர்.
இச்செயற்பாடுகளில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் பாடசாலை நிர்வாகம் பாடசாலை கல்வியில் நூலக செயற்பாடுகளை இனணப்பாடவிதான செயற்பாடுகளுடன் ஓர் அம்சமாக சேர்தது; கொள்ள வேண்டும் என்பதனையும், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு பெற்றோர் ஊக்கப்படுத்தவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவேளை பெற்றோர்களையும் மாணவர்களையும் நூலகங்களுடன் இணைப்பதற்காக
பொதுநூலகங்கள் வெளிக்களச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதும் அவசியமாகின்றது. |
en_US |