| dc.description.abstract |
அறிவின் பிரவாகமானது பல பரிணாமங்களில் காணப்படுகின்றது. இந்த கட்டற்ற
பெருக்கம், தகவல் பரிமாற்றம் நேரடியாக அறிவு வழங்கலுடன் சம்மந்தப்பட்டுள்ளது.
அறிவுப் புலங்களை தொடர்ச்சியாக வழங்குதில் பாடசாலை நூலகங்களின் பங்களிப்பு
அளப்பரியது. நூலகங்களில் புத்தக வளங்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை
முறையாக மாணவர்களுக்கு வழங்குவதிலும் முகாமை செய்வதிலும் பாடசாலை
நூலகர்கள் இடர்படுகின்றனர். இவை ஏறாவூர் கோட்டத்திலுள்ள பாடசாலை
நூலகங்களின் செயற்பாடுகளை வினைத்திறனாக வழங்குவதிலும்,
ஒழுங்கமைப்பதிலும் உள்ளக மேற்பார்வையை முன்னெடுப்பதிலும் பாடசாலை
நூலகர்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதனைக் கண்டறியும்
பொருட்டு இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மத்தி வலயத்தின்
ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளில் நூலகங்கள் காணப்படும் 15
பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவ்
ஆய்விற்கான ஆய்வு மாதிரிகளாக அதிபர்கள் அனைவரும் பாடசாலை தெரிவு
செய்யப்பட்டமைக்கமைவாகப் ஆய்வுக்குட்படுவதுடன், 15 அதிபர்களும், 25 பகுதித்
தலைவர்களும், 30 நூலகப் பொறுப்பாளர்களும் நோக்க மாதிரி அடிப்படையிலும்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் ஆய்விற்காக மொத்தமாக 70 பேர் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து,
நேர்காணல், அவதானம், ஆவணச்சான்றுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாய்வில் தொகைசார் மற்றும் பண்புசார் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதால்
இது அளவை நிலை ஆய்வாக உள்ளதுடன் ஆய்வு வடிவமாக கலப்பு வடிவம்
பயன்படுத்தப்பட்டுள்ளது. தரவுகள் பொருத்தமான மென்பொருள் (நுஒஉநட) முறைகளின்
ஊடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள்
உள்வாங்கப்படுவதுடன் பகுப்பாய்வின் மூலம் பல்வேறு முடிவுகளும்
கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுகளின் பிரகாரம் ஆய்வுக்குட்படுத்திய
பாடசாலைகளில் 80 சதவதீ மான முடிவுகளில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களே
நூலகதi; த செயற்படுத்துகின்றதுடன், 70 சதவீதமான நூலகங்கள்
வகுப்பறைகளில்தான் கூடியளவு செயற்படுத்தப்படுகின்றது. 60 சதவீதமான முடிவுகளில் தொழில்சார் நிபுணத்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. பட்டியலாக்க மற்றும்
பகுப்பாக்க முறைகள் பற்றிய தெளிவின்மை, ஏனைய ஆசியர்களின் தலையீடுகள்,
பாடசாலைகளில் நூலகங்களில் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் புத்தக
ஒழுங்கமைப்பு இன்மையும், நூலகங்கச் செயற்பாடுகளினை முன்னெடுப்பதில்
பொருத்தமான துறைசார் ஆளணிப் பற்றாக்குறை நிலவுதல் போனற் முடிவுகள்
பெறப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பொருத்தமான இட அமைவினை பாடசாலை
நூலகங்களுக்கு வழங்குதல், துறை சார்ந்தவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல்,
பட்டியலாக்க மற்றும் பகுப்பாக்க முறைகள் பற்றிய தெளிவினைப் பெற்றுக் கொடுத்தல்,
வினைத்திறனாக்குவதற்கு உள்ளக மேற்பார்வை மூலம் நூலகச் செயற்பாடுகளை
ஒழுங்கமைத்தல், துறைசார்ந்தவர்களினை நூலகங்களிற்கு நூலகர்களை நியமித்தல்,
பகுதித் தலைவர்கள், வலயக் கல்வி அலுவலர்களைக் கொணடு; நூலகங்களினை
மேற்பார்வை செய்தல், தகவல் தொடர்பாடல் அறிவினை மேம்படுத்தல், ஏனைய
நூலகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல், வலயக்கல்வி அலுவலகத்திடம் பாடசாலை
நூலகதத் pன் நிலைமையை எடுத்துக்கூறி அரசின் நிதி உதவியை நூலகத்திற்குப்
பெற்று நூலகத்தை நவீன முறையில் விஸ்தரிக்க முயற்சித்தல் போன்ற வகையில்
விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |