நூலகச் சூழலில் உள்ள மாணவர்களின் எழுத்தறிவினையும் வாசிப்பறிவினையும் மேம்படுத்துவதில் பேத்தாழைப் பொதுநூலகத்தின் பங்கு

Show simple item record

dc.contributor.author கௌரிகாந், பரமானந்தினி
dc.date.accessioned 2026-01-08T05:04:58Z
dc.date.available 2026-01-08T05:04:58Z
dc.date.issued 2025
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/17355
dc.description.abstract பேத்தாழை பொது நூலகமானது பல செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக சமூகத்தினரிடையே நூலகப் பாவனையினை அதிகரிப்பதுடன் பெருந்தொகையான நூல்களையும் அன்பளிப்பாக பெற்று வருகின்றமை குறிப்பிட்டுச்சொல்லத்தக்கது. ஆனாலும் இந்நூலகத்தினை அண்மித்த கிராமங்களில் வாழும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது வெளிக்களச் செயற்பாடுகளின் போது அவதானிக்கப்பட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் வறுமை, பாடசாலை இடைவிலகல், பாடசாலை வரவு குறைவு எனப் னவற்றைக் கூறலாம். இதனை தீர்க்கும் முகமாக மாணவர்களது எழுத்தறிவு வாசிப்புத் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் ஒன்று எமது நூலகத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையில் இச்செயற்றிட்டத்திற்காக நூலகத்தின் சுற்றுவட்டாரதத் pலுள்ள பாடசாலைகளில் ஒன்றான கருங்காலி;ச்சோலை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம் பாடசாலை அதிபரது அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்டது. இந்தச் செயற்றிட்டத்தினை வாசிப்பு முகாமாக உலக தரிசன நிறுவனத்தினூடாக நடாதத் pனோம். இதன் முதற்கட்டமாக அதிபரின் உதவியுடன் செயல்பாட்டு கல்வியறிவு மதிப்பீட்டு கருவியினூடாக (FLAT assessment) கற்றலில் இடர்படும் மாணவர்கள் கண்டறிந்தோம். இவ்வாறு தெரிவான 30 மாணவர்களையும் 3 மாதங்களுக்கு விளையாட்டுடன் கூடிய கற்றல் செயற்பாட்டினை நடாத்தியிருந்தோம். அவ்வாறு 73 வீதமான மாணவர்கள் கற்றல் இடர்பாட்டுடன் எழுதவும் வாசிக்கமுடியாத நிலையில் காணப்பட்டனர் (41 மாணவர்களில் 30 மாணவர்கள்). இத்திட்டத்தில் உலக தரிசன நிறுவனமானது மாணவர்களுக்கான ஊட்டச்சத்துக்களுடன் கூடிய இடையுணவுகளையும் வழங்கியது. மேலும் நூலக உத்தியோகத்தர்களுக்கு மாணவர்களை வழிப்படுத்துவதற்குரிய பயிற்சிகளையும் வளவாளர்கள் ஊடாக உலக தரிசன நிறுவனம் வழங்கியிருந்தது. அத்துடன் நூலகம் பெற்றோருக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயலமர்வுகளையும் நடாத்தியது. இச்செயற்றிட்டத்தில் மெல்லக் கற்கும் மாணவர்கள் வெளிச் சூழலில் கற்றலினை மேற்கொண்டு 3 மாதங்களின் பின் மீண்டும் குறித்த மாணவர்களை FLAT assessment கருவி ஊடாக மதிப்பீடு செய்தவேளை 30 மாணவர்களில் 60 வீதமானவர்கள் வாசிப்புநிலையில் முன்னேறியிருந்ததை காணக்கூடியதாகயிருந்தது. அதன்பின் முன்னேற்றம் கண்ட மாணவர்களைக் கொண்டு வாசிப்புத் தோழர்களை உருவாக்கி 12; மாணவர்களுக்கும் மீண்டும் வாசிப்பு பயிற்சியினை மேற்கொண்டது நூலகம். இறுதியில் இம்மாணவர்களைFLAT assessment ஊடாக மதிப்பீடு செய்த போது 92 வீதமானவர்கள் முன்னேறியதையும் அவதானிக்கக் கூடியதாகயிருந்தது. அத்துடன் அவர்கள் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் இருந்தததைக் காணக்கூடியதாகயிருந்தது. ஒவ்வொரு நாளும் கதைகளையும் பாடல்களையும் கேட்டு அவர்களே தங்களாக பல ஆக்கங்களையும் படங்களுடன் கூடிய கதைகளையும் எழுதியிருந்தனர். இவர்களது குடும்ப சூழ்நிலை பெரிதும் கல்வியை பாதித்ததை அறியக்கூடியதாகயிருந்தது. அவர்களைத் தொடர்ந்தும் வாசிப்பில் இடர்படுபவர்களும் இதில் கலந்து கொண்டு தமது உற்சாகத்தை வெளிப்படுத்தியதை அவதானித்தனர். இச்செயற்றிட்டத்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்தினடிப்படையில் நூலகமானது தனது வெளிக்கள சேவையினை தமது நூலகதத் pன் சுற்றாடலில் உள்ள வாசகர்களுக்கேற்ப செயற்படுத்தவேண்டும், வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிப்பதற்கு முதலில் எழுத்தறிவு வாசிப்புத் திறன் போன்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வாசிப்பு முகாம் போன்றவற்றையும் நூலகங்கள் மேற்கொள்ளலாம் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர en_US
dc.language.iso other en_US
dc.publisher Main Library, Eastern University, Sri Lanka en_US
dc.subject பேத்தாழை பொது நூலகம், en_US
dc.subject வாசிப்பு முகாம், en_US
dc.subject கற்றல் கற்பித்தல், en_US
dc.subject மெல்லக் கற்றல் en_US
dc.title நூலகச் சூழலில் உள்ள மாணவர்களின் எழுத்தறிவினையும் வாசிப்பறிவினையும் மேம்படுத்துவதில் பேத்தாழைப் பொதுநூலகத்தின் பங்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • IRCL 2025 [29]
    Proceedings of International Reserach Conference of the Library 2025

Show simple item record

Search


Browse

My Account