dc.description.abstract |
மீள் கட்டுமான செயற்றிட்ட தலையீடுகள் சமூகத்தில் ஒருங்கிசைவு, முரண்பாட்டுச் சூழ்நிலை என்பன தொடர்பில் கவனத்தையீர்க்கின்றன. மீள்கட்டுமான செயற்றிட்டங்கள் சமுதாய தேவைப் பூர்த்தியுடன் தொடர்புபட்ட வகையில் முரண்பாட்டு தடுப்புக் காரணிகளாக அமையும். அவ்வாறல்லாவிடின் சமுதாயத்தில் ஏற்கனவே காணப்படும் முரண்பாடுகளின் தன்மையினை தீவிரமாக்கும் அல்லது புதிய முரண்பாட்டுக்கான காரணிகளாக அமையும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள்கட்டுமானம் தொடர்பில் கவனம் செலுத்தத்தக்கவை. ஏனெனில் இயற்கை அனர்த்தங்கள், மற்றும் போர் என்பவற்றின் பின்னரான பெருமளவிலான செயற்றிட்டங்கள் மீள்கட்டுமானம் தொடர்பில் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன. இன, மத, சாதி ரீதியிலான பல்லினத்தன்மை கொண்ட சமுதாயங்களிலும் மீள்கட்டுமான செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அமுல்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் மக்களது அபிப்பிராயங்களை மையப்படுத்தி, இச்செயற்றிட்ட அமுலாக்கங்கள் சமூக ஒழுங்கில் ஏற்படுத்திய தாக்கத்தினை மதிப்பிடுவதாக அமைகின்றது. மீளமைப்புச் செயற்றிட்ட நடைமுறைகளில் பொதுவாகக் காணப்பட்ட குறைபாடாக கருதப்படுவது பயனாளிகளைத் தெரிவு செய்வதில் காட்டப்பட்ட பாரபட்சமாகும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு, தேவையுடைய
குடும்பங்கள் பல, அவர்களது தேவைகளை மையப்படுத்தி, அவர்களது சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட்ட மீளமைப்பு திட்டங்களில் பயனடைவதில் இருந்து புறந்தள்ளப்பட்டுள்ளனர். பொதுவளப் பகிர்வு, விநியோகம் என்பவற்றுடன் தொடர்புபட்ட மீள்கட்டுமானத் திட்டங்கள் சமுகத்தில் ஏற்கனவே புறந்தள்ளப்பட்டு, பொதுவளங்களைப் பெறுவதில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு பயனளித்தவையாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக சில தமிழ் கிராமிய சமுதாயங்களில் சாதிரீதியாக ஓரங்கட்டல்களால் ஓடுக்கப்பட்ட சாதிக்குழுக்கள் பொதுவான வளங்களை அனுபவிப்பதில் இருந்து தடுக்கப்பட்டிருந்தன. பிரதானமாக நீர்வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒடுக்கப்பட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் உள்ளீர்க்கப்படுவது இன்றியமையாததாகும். ஆனால் பெருமளவிலான உட்கட்டுமான மீளமைப்பு செயற்றிட்டங்களில் மக்களது கருத்துக்கள் கேட்டறியப்படவில்லை. இதனால் மக்களது உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அதிகமான கட்டுமானங்கள் அமையவிலலை. வீடமைப்புத் திட்டங்கள் பல மக்களது அடிப்படையான குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பௌதீக வசதிகளை கொண்டிருக்கவில்லை. அத்தோடு சில சமுதாய மக்களின் கலாசாரத்திற்குப் பொருந்தாத வகையிலும்
நெய்தல், ஜூலை – டிசம்பர் 2018, தொகுதி: 09, எண்: ii
அமையப்பெற்றிருந்தன. பிராந்திய நிருவாக,
அரசியல் தலைமைகளின் வழிகாட்டல்களின்
படியே அவை நடைமுறைப்பட்டிருந்தன. இது பல
இடங்களில் முரண்பாட்டுச் சூழ்நிலைகளில்
குறிப்பிடத்தக்க எதிர்நிலையான பாதிப்பினை
ஏற்படுத்தியிருந்தது. அதாவது ஏற்கனவே இருந்த
முரண்பாடுகளை தீவிரப்படுத்தியிருந்தது.
அத்தோடு புதிய முரண்பாடுகளையும்
தோற்றுவித்திருந்தது. குறிப்பாக வீடமைப்புத்
திட்டங்களே இத்தகைய இழுபறி நிலையை
இனக்குழுக்கள் மத்தியில்
ஏற்படுத்தியிருந்தன.மேலும் சமுதாய
ஒழுங்கமைப்பு தொடர்பில் மரபுரீதியான
கருத்தியலைவிடுத்து ஒரு நவீன
அணுகுமுறையொன்றை பின்பற்றவேண்டியதன்
அவசியமும் உணரப்பட்டுள்ளது. அதாவது
தேவைக்கான வளங்களை பெற்றுக்கொள்ளும்
நோக்குடன் மக்களை போராடுவதற்காக
ஒன்றிணைக்கின்ற மரபுசார் சமுதாய
ஒழுங்கமைப்பு அணுகுமுறையை
பின்பற்றுவதானது சமுதாயத்தின் குழு
அடையாளத்ததை உண்டுபண்ணத்தக்க சமூகப்
பிரிவுகளின் வழியே மக்கள் ஒழுங்கமைய
வழிவகை செய்யும். இது மீளமைப்புசார்
அபிவிருத்திக்கு எதிரான சூழ்நிலையை
தோற்றுவிக்கும். இதைவிடுத்து அபிவிருத்தி
இலக்குகளை நோக்கி ஒரு குழுவாக
செயற்படுவதற்கு மக்களை ஊக்குவிப்பதானது
பங்குகொள் அபிவிருத்திக்கு சாதகமான
சூழ்நிலையை ஏற்படுத்தும். இவ்வகை
ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவதற்காக சிவில்
சமூகத்தை பலப்படுத்தும் கைங்கரியங்களை
மேற்கொள்வது அவசியமானது.
திறவுச் சொற்கள்: சமூக ஒருங்கிசைவு, சமுதாய
மீளமைப்பு, மீள்கட்டுமானம், சிவில் சமூகம்,
சமுதாய ஒழுங்கமைப்பு
1. அறிமுகம்
முரண்பாட்டிற்கு பின்னரான சூழ்நிலையில்
சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில்
மீள்குடியேற்றம் (சுநளநவவடநஅநவெ)
நல்லிணக்கம் (சுநஉழnஉடையைவழைn),
புனர்வாழ்வளித்தல்
(சுநாயடிடைவையவழைn)இ மீள்கட்டுமானம்
(சுநஉழளெவசரஉவழைn) என்பன
பிரபலமான செயன்முறைகளாகும். இதில்
மீள்கட்டுமானம் என்பது வெளிப்படையாகவே
சமூகத்தின் உட்கட்டுமானம் சார்ந்த
மீள்கட்டியெழுப்புதலை குறித்து நிற்கின்றது.
சமூக ஒழுங்கு ஒன்றை பொறுத்த வரை,
உட்கட்டுமானமென்பது சமூக
உறுப்பினர்களது தேவைகளைப் பூர்த்தி
செய்வதை மையப்படுத்தியதாகும். இதனால்
உட்கட்டுமானத்தை
மீளக்கட்டியெழுப்புவதென்பது
அனர்த்தத்திற்கு பின்னரான சூழ்நிiயில்
அவசியமானதொன்றாகின்றது. ஏனெனில்
சமூக உறுப்பினர்களுக்கிடையில் உடன்பாடு
சார்ந்த ஒருமைப்பாடு நிலவ வேண்டியது
சமூக ஒழுங்கிற்கு அவசியமானது.
அவ்வாறாயின் மக்களது தேவைகளைப்
பூர்த்தி செய்யத்தக்க வகையில் சமூகத்தில்
செயற்பாடுகள் கையாளப்பட வேண்டும்.
இதனடிப்படையில் அனர்த்தத்திற்கு
பின்னரான சமுதாயங்களில் மீளமைப்பு
பணிகளை ஆற்றுகின்ற போது அவை
அம்மக்களது தேவைகளை பூர்த்தி
செய்யத்தக்க வகையிலும்,
முரண்பாடுகளையோ அல்லது வேறு சமூகப்
பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையிலும்
அமைய வேண்டும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. |
en_US |