மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு நடத்தை; யுத்தத்தின் பின்னரான உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

Show simple item record

dc.contributor.author Kanneraj, A
dc.date.accessioned 2021-05-21T08:41:53Z
dc.date.available 2021-05-21T08:41:53Z
dc.date.issued 2019
dc.identifier.issn 20126573
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14420
dc.description.abstract பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அச்சாணி வாக்களிப்பு ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாகத் தமிழ் மக்களும், சிறுபான்மையாக முஸ்லீம் மக்களும் வாழ்கின்றனர். ஆயினும், அவர்களிடையே வாக்களிப்பு நடத்தையில் வித்தியாசம் காணப்படுகின்றதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரினம் வாழும் இம்மாவட்டத்தில், ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் பின்தங்கி நிற்கும்போது, அது அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள நிலைமையில், ஈரின மக்களிடையேயும் வாக்களிப்புத் தொடர்பில் சமாந்தரமான போக்கு காணப்படுகின்றதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாய்வானது, கலப்பு ஆய்வுமுறையியல் அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பண்பு, மற்றும் தரவுசார் தகவல்கள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ரீதியான வாக்களிப்பு நடத்தை தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என வினாவுவேமாயின், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மாவட்ட அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. இத்தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையிலேயே குறித்த இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் அசமந்தப் போக்கை வெளிப்படுத்துமெனில், தமது இனத்தின் விகிதாசாரத்திற்குக் குறைவான அரசியல் பிரதிநிதுத்துவத்தையே பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலை குறித்த சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பின்னடைவை ஏற்படுத்தும். en_US
dc.language.iso ta en_US
dc.publisher Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka en_US
dc.subject வாக்களிப்பு நடத்தை en_US
dc.subject உள்ளூராட்சி மன்றம் en_US
dc.subject அரசியல் பிரதிநிதித்துவம் en_US
dc.subject மட்டக்களப்பு மாவட்டம் en_US
dc.title மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு நடத்தை; யுத்தத்தின் பின்னரான உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account