dc.contributor.author |
Mujahid, ALM |
|
dc.date.accessioned |
2021-06-28T06:13:09Z |
|
dc.date.available |
2021-06-28T06:13:09Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.issn |
20126573 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk/1234/14434 |
|
dc.description.abstract |
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவ்வாறு வாழ வேண்டும் என்ற அனைத்து வகையான வழிகாட்டுதல்களையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. இஸ்லாமியர்கள் அல்குர்ஆனைப் பின்பற்றுவது போன்று நபியவர்களுடைய ஹதீஸ்களைப் பின்பற்றுவதும் அவசியமாகும். ஹதீஸ்கள் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய போதனைகளைக் குறிக்கின்றது. ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வழிகாட்டல்களும் நபியர்களுடைய வாழ்வியலில் போதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒரு மனிதன் தான் வாழும் சூழலில் காணப்படும் ஏனைய பிராணிகளோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டல்களை நபியவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அனைத்து வகையான உயிரினங்களும் மனிதர்களுக்கு வளமாகவே வழங்கப்பட்டுள்ளன. அந்த வளங்களை முறையாகப் பயன்படுத்துவதோடு அவைகளைப் பராமரித்தல், பாதுகாத்தல் என்பன மனிதனுக்குரிய பொறுப்பாகவும் சுமத்தப்பட்டுள்ளது. எமது சூழலிலே பொக்கிஷங்களாக வழங்கப்பட்டுள்ள பிராணிகளின் மூலம் மனிதர்கள் அதிகமான பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் மிருகங்கள் மீது அன்பு காட்டுதல், அவைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் நபியவர்களுடைய ஹதீஸ்களில் போதிக்கப்பட்டுள்ள விடயங்களில் மனித சூழலில் காணப்படும் பிராணிகள் தொடர்பாகவும் அவற்றின் பேணுகை தொடர்பாகவும் ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வு பெரும்பாலும் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் விவரண ஆய்வாகவே நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆய்வின் முதனிலைத் தரவாக ஹதீஸ்கள் கொள்ளப்படுவதோடு இரண்டாம் நிலைத் தரவுகளாக அவை தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரினங்களின் பேணுகை பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இவ்வாய்வு வழிகாட்டியாக அமையும். |
en_US |
dc.language.iso |
ta |
en_US |
dc.publisher |
The role of religious literatures in the bio diversity conservation |
en_US |
dc.subject |
இரக்கம் காட்டுதல், அன்பு செலுத்துதல், பாதுகாத்தல், சூழல் பிராணிகள் |
en_US |
dc.title |
பல்லுயிர்ப் பேணுகையின் அவசியமும் வழிகாட்டல்களும் - ஹதீஸ் மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |