dc.contributor.author |
Mujahid, ALM |
|
dc.date.accessioned |
2021-06-28T06:27:08Z |
|
dc.date.available |
2021-06-28T06:27:08Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.issn |
20126573 |
|
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk/1234/14435 |
|
dc.description.abstract |
அரபுத்தமிழ் என்பது தமிழ் மொழியை அரபு எழுத்துருவில் எழுதுவதாகும். அதாவது இது வரிவடிவில் அரபு மொழியாகவும் ஒலி வடிவில் தமிழ் கருத்தையும் விளக்கும் ஒரு அமைப்பாகும். எனவே இதனை அரபு, தமிழ் ஆகிய இரு மொழிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒரு மொழி வடிவம் எனலாம். இதுவே அரபுத்தமிழுக்கு வழங்கப்படும் ஒரு சுருக்கமானதும் பொருட்செறிவும் கொண்ட வரைவிலக்கணமாகும். இது நவீன யுகத்தில் பெரும்பாலும் கையடக்கத்தொலைபேசியில் குறுஞ்செய்திகள் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்ற ஒலி தமிழாகவும் எழுத்து ஆங்கிலமாகவும் அமைந்திருக்கும் 'தங்லிஷ;' போன்றதாகும். எனினும் அரபுச் சொற்கள் கலந்த தமிழையும் அரபுத்தமிழ் என அழைக்கும் மரபும் பிற்காலத்தில் உருவானது. தமிழ் பேசும் முஸ்லிம்கள்தான் இந்த மொழி வடிவத்தை உருவாக்கி உபயோகித்தனர் என்பதை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்கின்ற போது அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கை முஸ்லிம்களிடத்தில் அரபுத்தமிழின் தோற்றம், செல்வாக்கு, வீழ்ச்சி போன்ற விடயங்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வு வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விவரண ஆய்வாகும். ஆய்வின் இரண்டாம் நிலைத் தரவுகளாக இத்தலைப்பு தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது அரபுத்தமிழ் பற்றி ஆய்வு செய்பவர்களின் தேடலுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். |
en_US |
dc.language.iso |
ta |
en_US |
dc.publisher |
ஆய்த எழுத்து- பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் |
en_US |
dc.subject |
தமிழ் இலக்கியம், அரபுத்தமிழ், இலங்கை முஸ்லிம்கள், இலக்கியப் பாரம்பரியம் |
en_US |
dc.title |
இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பங்களிப்பில் அரபுத்தமிழ் வழக்கின் செல்வாக்கும் வீழ்ச்சியும் – ஒரு வரலாற்று ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |