Abstract:
அரபுக் கவிதைகள் எக்காலப்பகுதியில் முதன்முதலில் தோன்றின என்று அறிவதற்கு போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லையாயினும், தனித்தனி கவிதைகள் மிக ஆரம்ப காலத்திலே தோன்றியிருக்க முடியும். ஆயினும் அப்துல் முத்தலிப் காலத்தில்தான் கஸீதாக்களின் உருவில் அரபுமொழியில் கவிதைகள் தோன்றியிருக்க முடியும் என்று ர்யுசு. கிப் என்பவர் தனது அரபு இலக்கியம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கி.பி ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டளவில் கவிதைகள் தோன்றின என்று கருத இடமுண்டு. இக்காலத்தில் தோன்றிய கவிதைகளின் மொழிநடை, பொருளமைதி, இலக்கிய மரபு, சொல்வளம் என்பவற்றை கொண்டிருப்பதானது இவை நீண்ட கால வளர்ச்சியின் பின் தோன்றியவை என்று கருத இடமளிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு அரபுக் கவிதைகளின் தோற்றமும் பொருள் மரபும் எனும் பொருண்மையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.