dc.description.abstract |
இவ்வாய்வானது வியாபாரப் போட்டிக்கான இஸ்லாத்தின் வரையறைகளையும் ஒழுங்குகளையும் தெளிவுபடுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. இஸ்லாம் வியாபாரத்தில் விசேட கவனம் செலுத்துவதோடு மகிழ்ச்சியை ஈட்டித்தரும் வகையில் நல்ல பல திட்டங்களையும் வகுத்துத் தந்;துள்ளது. மோசடி, ஏமாற்று, கள்ளத்தனமான போட்டி, பதுக்கல், வியாபாரப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவராது நெருக்கடியை ஏற்படுத்தல் போன்ற கேள்வியை அதிகரிக்கச் செய்யும் வியாபாரப்போட்டி முறைகளில் இருந்து விடுபட்டு சீரான அடித்தளத்தில் அமைந்த சந்தைகளையே இஸ்லாம் வரவேற்பதோடு அதற்குரிய வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. இதன்படி இம்மார்க்கத்தின் இலக்கானது பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளால் மாற்றமுறும் வியாபாரப்போட்டி நிலைமைகளுக்கேற்றவாறு கேள்விக்கும் கையிருப்புக்கும் ஏற்ப நீதமான விலையை நிர்ணயம் செய்தலாகும். இதற்காக இவ்வாய்வு பின்வரும் அம்சங்களை பரிந்துரை செய்கின்றது. எமது அன்றாட கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் இஸ்லாத்தின் வரையறைகள், விதிகளைப் பேணல், கண்காணிக்கும் பணியில் இருப்பவர்களிடம் விசேட சிறப்பம்சங்களும் நிபந்தனைகளும் நிறையப்பெற்றிருத்தலின் அவசியத்தை உணர்த்துதல், பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையைத் தீர்மானித்தல். வியாபார நடவடிக்கைகளில் மக்களுக்கு அநியாயம் செய்து சதி, மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தல், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலுமே இஸ்லாமிய சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தி கண்காணித்தல். இவ்வாய்வு வியாபாரப் போட்டிக்கான வரையறைகள் என்ன?, இஸ்லாம் அதற்கு வகுத்துள்ள ஒழுங்குகள் யாவை? என்ற இரண்டு பிரதான வினாக்களுக்கு விடையளிக்க முனைகிறது. |
en_US |