Abstract:
தேசம் என்பது விளக்கவியலாத ஆனால் வலுவான தனிமனித
அடையாளஞ் சார்ந்த ஒரு அமைப்பு எனும் கருத்துநிலையும் தேசம்
வரலாற்றுவழி வளர்ந்த இன அடையாளஞ் சார்ந்தது எனுங் கருத்து
நிலையும் அரசை மையப்படுத்தும் கருத்துநிலைகளும் பிறவும் தேசத்தின்
இயல்பையும் தோற்றத்தையும் விளக்க முயன்றுள்ளன (துழளநி சு. டுடழடிநசயஇ
1999). ஒரு தேசத்தின் தோற்றமும் அதன் நிலைப்பின் அடிப்படையும்
எவ்வாறாயினும், தேசம் பற்றிய சமகால உரையாடல்கள் தேச-அரசு
என்பதை மையப்படுத்துவன. எனவே அது சார்ந்து எழும் தேசியப்
பிரச்சனைகளின் நோக்கிலேயே இக்கட்டுரை அமைகிறது.