Abstract:
நாட்டுப்புறக் கதையாடல்| என்பது குழடம யேசசயவiஎந என மேலை நாட்டு
ஆய்வாளர்கள் குறிப்பிடுவதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அமெரிக்க
நாட்டின் இந்தியானா பல்கலைக் கழகத்தில் 1963 இல் தொடங்கப்பட்ட
நாட்டுப்புறவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய லிண்டா டெக்
(டுiனெய னுநபா) வெளியிட்டுள்ள கட்டுரை குழடம யேசசயவiஎந என்ற தலைப்பில்
அமைந்துள்ளது. இக்கட்டுரை தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள்
நாட்டுப்புறக் கதை (குழடம வயடந) பற்றி புரிந்து கொள்வதற்கான ஆதாரக்
கட்டுரையாக அமைந்தது என்று சொல்வதில் தவறில்லை. நாட்டுப்புறக்
கதையாடல் என்ற மொழி பெயர்ப்புச் சொல்லும் நாட்டுப்புறக் கதைகளின்
வகைப்பாடுகளும் விளக்கங்களும் இந்தக் கட்டுரையின் வழியாகத்
தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் நுழைந்தன எனலாம்.(1972 :
55-82). நாட்டுப்புறக் கதையாடல் என்ற கலைச் சொல்லை இறுக்கமாகப்
பற்றிக் கொண்டு இது குறித்து மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ள
கருத்துக்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு தமிழக
ஆய்வாளர்கள் பெரும்பாலோர் எடுத்தாண்டு விளக்கி வருகிறார்கள்.
அவர்களுள் பேராசிரியர் தே.லூர்து குறிப்பிடத்தக்கவர். அவர்
ஷகதைப் பாடல்களையும் காப்பியங்களையும் புராணக் கதைகளையும்
பழமரபுக் கதைகளையும் நாட்டார் கதைகளையும் 'எடுத்துரைப்பவை|
என்றும் ஷகதையாடல்கள்| (யெசசயவiஎநள) என்றும் குறிப்பிடுவர். இந்தக்
கதையாடல்களைக் கவிதையின்வழி எடுத்துரைக்கப்படுபவை, உரை
நடைவழி எடுத்துரைக்கப்படுபவை என்று இரு வகைப்படுத்துவர்.
கவிதைகளின்வழி (பாடல்களின்வழி) எடுத்துரைக்கப்படுபவற்றைக்
கதைப்பாடல் (டியடடயன), காப்பியம் (நிiஉ) என்று இருவகைப்படுத்துவர்.
உரைநடையில் எடுத்துரைக்கப்படும் கதையாடல்களை நாட்டார் கதைகள்
(கழடம வயடநள)இ பழமரபுக் கதை (டநபநனெ) புராணக் கதை (அலவா) என்று
மூன்று வகைப்படுத்துவர் (தே. லூர்து:2011:151) என மேலைத் தேய
நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களின் கருத்துக்களைத் தமிழ் மொழியில்
தந்துள்ளார். இப்படியான கருத்துக்களை அறிந்து கொள்வது மிகவும்
தேவைதான். ஆனால் தமிழ்ச் சிந்தனை மரபில் இக்கருத்துக்கள் இடம்
பெற்றுள்ளனவா? என்ற கேள்வியை மேலைத்தேயச் சிந்தனை முறையின் ஆக்கிரமிப்பு தடுக்கிறது. சில தமிழ் ஆய்வாளர்கள் தொன்மம்,
விடுகதை, பழமொழி பற்றி ஆய்வு செய்தபோது தொல்காப்பியத்திலிருந்து
சில நூற்பாக்களை எடுத்துக்காட்டிவிட்டு நகர்ந்துள்ளனர். அந்நூற்
பாக்கள் பற்றிய விவாதத்தை மேற்கொண்டார்கள் இல்லை. அதிலும்
நாட்டுப்புறக் கதை, கதைப்பாடல் என்ற பெயர்களைப் பயன்படுத்தி
அவை பற்றி ஆய்வு செய்தவர்கள் தொல்காப்பியத்திற்குள் பயணம்
செய்து அவை பற்றிய கருத்துக்கள் எவையேனும் இடம் பெற்றுள்ளனவா
என்ற தேடலை மேற்கொண்டதில்லை. மேலைத்தேய ஆய்வாளர்களின்
சிந்தனைகளைப் புறக்கணிக்க முடியாதுதான். ஆனால் தமிழரின்
சிந்தனை மரபுகளைப் புறக்கணித்துவிட்டு மேலைத்தேயச் சிந்தனைகளைத்
தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது நியாயமில்லை. எனவேதான்
அந்த நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்
படுகிறது.